Advertisment

ரொம்ப உழைப்பு தேவையில்ல: ஆரோக்கியமான காலை உணவு : மிஸ் பண்ணாதீங்க

கம்பு தோசையில் அதிக சத்துக்கள் இருக்கிறது. இதனால் இந்த ரெசிபியை தவறாம சாப்பிடுங்க.

author-image
WebDesk
New Update
ரொம்ப உழைப்பு தேவையில்ல: ஆரோக்கியமான காலை உணவு : மிஸ் பண்ணாதீங்க

கம்பு தோசையில் அதிக சத்துக்கள் இருக்கிறது. இதனால் இந்த ரெசிபியை தவறாம  சாப்பிடுங்க.

Advertisment

தேவையான பொருட்கள்         

கம்பு – 400 கிராம்

இட்லி அரிசி- 400 கிராம்

உளுந்தம் பருப்பு- 200 கிராம்

வெந்தயம் – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் கம்பை நன்றாக கழுவ வேண்டும். இந்நிலையில் நன்றாக தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊற வைக்கவும். தொடர்ந்து இட்லி அரிசியை தனியாக ஊற வைக்க வேண்டும். இதுபோல உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

தொடந்து முதலில் இட்லி அரிசியை கிரேண்டரில் போட்டு அரைக்கவும். நன்றாக அரைந்ததும் கம்பை சேர்க்கவும். கம்பு பாதி அரைப்பட்டதும். உளுந்து மற்றும் வெந்தயத்தை சேர்க்கவும். தொடர்ந்து நன்றாக அரைத்தெடுக்கவும். 6 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். தொடர்ந்து தேவையான உப்பு சேர்த்து, தோசை ஊற்றலாம்.   

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment