உடைந்த எலும்பை ஓட்ட வைக்கும் இந்தக் கீரை... இப்படி யூஸ் பண்ணுங்க: டாக்டர் கார்த்திகேயன்
எலும்பு ஒட்டி இலை சாறு எடுத்து எப்படி பயன்படுத்துவது, எலும்பு ஒட்டி இலையை அரைத்து அந்தச் சாறு எப்படி பாலில் கலந்து குடிப்பது, எலும்புச் ஒட்டி இலையில் எண்ணெய் காய்ச்சி எப்படி பயன்படுத்துவது என்பதை டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
எலும்பு ஒட்டி இலை சாறு எடுத்து எப்படி பயன்படுத்துவது, எலும்பு ஒட்டி இலையை அரைத்து அந்தச் சாறு எப்படி பாலில் கலந்து குடிப்பது, எலும்புச் ஒட்டி இலையில் எண்ணெய் காய்ச்சி எப்படி பயன்படுத்துவது என்பதை டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
எலும்பு ஒட்டி இலையின் நன்மைகள் குறித்தும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.
உடைந்த எலும்பை ஒட்டை வைக்கும் இந்த இலையை வைத்தியர்கள் எலும்பை ஒட்ட வைக்க, இந்த இலைகளுடன் முட்டையின் வெள்ளைக்கரு, உளுந்து சேர்த்து மூங்கில் பத்தை வைத்து கட்டுபோட்டுவிடுவார்கள். ஆனால், அந்த இலையின் பெயர் என்ன என்று சொல்ல மாட்டார்கள். ரகசியமாக வைத்திருப்பார்கள். அதுதான் எலும்பு ஒட்டி இலை. இலும்பு ஒட்டி கீரை என்றும் கோழி மூக்கன் கீரை என்று, கூரைவாள் கீரை என்றும் கூறுவார்கள் என டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
Advertisment
எலும்பு ஒட்டி இலையின் நன்மைகள் குறித்து டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார். அதில், எலும்பு ஒட்டி இலை சாறு எடுத்து எப்படி பயன்படுத்துவது, எலும்பு ஒட்டி இலையை அரைத்து அந்தச் சாறு எப்படி பாலில் கலந்து குடிப்பது, எலும்புச் ஒட்டி இலையில் எண்ணெய் காய்ச்சி எப்படி பயன்படுத்துவது என்பதை டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
இந்த எலும்பு ஒட்டி செடியின் பெயர் பிளிபேரிஸ் மதராஸ்பட்டன்ஸிஸ் (Blepharis maderaspatensis) இந்த பெயரில் இருந்தே இது தமிழ்நாட்டைச் சேர்ந்தது என்பது தெரிகிறது. இந்த இலையை வைத்தியர்கள் உடைந்த எலும்பை ஒட்ட வைக்க முட்டையின் வெள்ளைக்கரு, உளுந்து உடன் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால், உடைந்த எலும்பை சரியாகத் துல்லியமாகப் பொருத்தி ஒட்ட வைக்க ஆங்கில மருத்துவத்தின் தொழில்நுட்பம் தான் சரியானது. அதே நேரத்தில் ஒருங்கிணைந்த மருத்துவத்தையும் நாம் முயற்சி செய்ய வேண்டும் என்று டாக்டர் கார்திகேயான் பரிந்துரைக்கிறார்.
Advertisment
Advertisements
இந்த எலும்பு ஒட்டி இலைகளை தோசைக் கல்லில் வாட்டும்ப்போதே எண்ணெய் வடிவதைப் பார்க்க முடியும். ஃபிளவனாயிட்ஸ் சத்துகள், சபோனின், மியூசிலேஜ், ரூட்டின், குர்செட்டின், கேஃபின் ஆசிட் எல்லாம் இருக்கிறது.
இந்த எலும்பு ஒட்டி செடியின் விதைகளை முகர்ந்து பார்த்தால் காஃபி வாசனை வரும், இதற்கு காரணம், இதில் உள்ள கேஃபிக் ஆசிட், ஃபெருலிக் ஆசிட்தான் காரணம் என்று கூறுகிறார்.
1.முதலில் எலும்பு ஒட்டி இலையில் இருந்து சாறு எடுக்க வேண்டுமானால், இரண்டு கைப்பிடி எலும்பு ஒட்டி இலை எடுத்துக்கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 1 டம்பளர் தண்ணீர் ஊற்றுங்கள். அதில் எலும்பு ஒட்டி இலை போட்டு கொதிக்க விடுங்கள். அன்றாகக் கொதித்த பின், அந்த தண்ணீரை உடைந்த எலும்பை ஒட்டை வைக்க கட்டு போடும்போது பிளாஸ்டர் உடன் கலந்து போடலாம்.
2. அதே போல, எலும்பு ஒட்டி இலையை மிக்ஸியில் போட்டு அரைத்து அந்த சாறை வடிகட்டி எடுத்துக்கொள்ளுனங்ள். பிறகு, 150 மி.லி. பாலைக் காய்ச்சி ஆறவைத்து அதில் எலும்பு ஒட்டி இலை சாறு 2 டீஸ்பூன் கலந்து குடிக்கலாம். இந்த சாறை 2 மாதங்களுக்கு ஒரு முறைதான் குடிக்க வேண்டும். அதிகம் குடிக்கக் கூடாது.
3.வது ஒரு கடாயில் நெல்லெண்ணெய் ஊற்றி சூடு பண்ணுங்கள். பிறகு, அதில் எலும்பு ஒட்டி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ளுங்கள். அந்த இலையை இரண்டு, முன்று நான்காக பிச்சிப் போடுங்கள். நன்றாகக் காய்ச்சிய பிறகு, எலும்பு ஒட்டி இலை சாறு எண்ணெய்யில் கலந்து இருக்கும். இதை எடுத்து மூட்டு வலி இருந்தால் மேலே தடவலாம்” என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.