காலை எழுந்ததும் இந்த டிரிங்க்; இனிப்பு பதில் பழங்கள்: தைராய்டு நோயாளிகளுக்கு டாக்டர் ஷர்மிகா டிப்ஸ்
"தைராய்டு நோயாளிகள் வீட்டில் தயார் செய்யாத வெளியில் வாங்கப்பட்ட புரோட்டீன் உள்ளிட்ட ஹெல்த் டிரிங்க்ஸ்-களை அருந்தி வந்தால் அவற்றை தவிர்த்து விடுங்கள்." என்கிறார் டாக்டர் ஷார்மிகா.
"தைராய்டு நோயாளிகள் வீட்டில் தயார் செய்யாத வெளியில் வாங்கப்பட்ட புரோட்டீன் உள்ளிட்ட ஹெல்த் டிரிங்க்ஸ்-களை அருந்தி வந்தால் அவற்றை தவிர்த்து விடுங்கள்." என்கிறார் டாக்டர் ஷார்மிகா.
"காலை 5 மணி முதல் இரவு 10 மணிக்குள், ஏதாவது ஒரு மணி நேரம் உடற்பயிற்சிக்கு என ஒதுக்க வேண்டும்." என்று டாக்டர் ஷார்மிகா கூறுகிறார்.
தைராய்டு சுரப்பி என்பது வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்த உதவும் ஹார்மோன்கள். உடல் நிலை, உடலின் வெப்பநிலை, இதயத்துடிப்பு, எடை போன்றவற்றை நிர்வகிப்பதற்கு இவை உதவுகின்றன. தைராய்டு சுரப்பி அதிகமாக சுரப்பதால் இந்த வேலைகளில் பாதிப்பு ஏற்படுகிறது.
Advertisment
மேலும், அதிகரித்த இதயத்துடிப்பு, அதீத பசி, பதட்டம், திடீரென உடல் எடை இழப்பு போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாக உள்ளன. இந்நிலையில், தைராய்டு நோயாளிகளுக்கு டாக்டர் ஷார்மிகா 5 முக்கிய டிப்ஸ்களை வழங்கியுள்ளார். இதுபற்றி டெய்சி யூடியூப் சேனல் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் அவர் பேசுகையில், "தைராய்டு நோயாளிகள் வீட்டில் தயார் செய்யாத வெளியில் வாங்கப்பட்ட புரோட்டீன் உள்ளிட்ட ஹெல்த் டிரிங்க்ஸ்-களை அருந்தி வந்தால் அவற்றை தவிர்த்து விடுங்கள்.
காலை 5 மணி முதல் இரவு 10 மணிக்குள், ஏதாவது ஒரு மணி நேரம் உடற்பயிற்சிக்கு என ஒதுக்க வேண்டும். காலை நேரத்தில் சூரியன் உதிக்கும் முன் இருக்கும் வெயில் அல்லது மாலையில் சூரியன் மறையும் போது இருக்கும் வெயில் உங்கள் உடல் மீது படும் படி செய்து கொள்ளவும். குறைந்தது 5 முதல் 10 நிமிடம் சூரியனைப் பார்க்க வேண்டும் அல்லது சூரிய வெளிச்சம் படும்படி உட்கார வேண்டும்.
இரவு தூங்கும் முன் மல்லி விதைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, காலை எழுந்ததும் அதனை வடிகட்டி குடித்து வரலாம். தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அந்த தண்ணீரில் வீட்டில் அரைத்த மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து பருகி வரவேண்டும். தைராய்டு நோயாளிகள் எப்போதும் வீட்டில் பழங்களை வைத்திருக்க வேண்டும். இனிப்பு பண்டங்களை சாப்பிட தோணும் போதெல்லாம் அவர்கள் பழங்களை சாப்பிட்டு வரலாம். இந்த டிப்ஸ்களை குறைந்தது 3 மாதம் தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் உடலில் பெரிய அளவில் மாற்றம் தெரியும்" என்கிறார் டாக்டர் ஷர்மிகா.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.