New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/19/0Zkk7371XCA96adcinkc.jpg)
இப்படி சமைத்த சாம்பாரை ஃப்ரிட்ஜில் வைத்து சூடாக்கி சாப்பிட்டால் கேன்சர் அபாயம் உள்ளது என்று மருத்துவர் கு. சிவராமன் எச்சரிக்கிறார். Image: freepik
இப்படி சமைத்த சாம்பாரை ஃப்ரிட்ஜில் வைத்து சூடாக்கி சாப்பிட்டால் கேன்சர் அபாயம் உள்ளது என்று மருத்துவர் கு. சிவராமன் எச்சரிக்கிறார். Image: freepik
இப்படி சமைத்த சாம்பாரை ஃப்ரிட்ஜில் வைத்து சூடாக்கி சாப்பிட்டால் கேன்சர் அபாயம் உள்ளது என்று மருத்துவர் கு. சிவராமன் எச்சரிக்கிறார். அதனால், உஷார் மக்களே!
மக்கள் சமையலுக்கு ரெடிமேடு உணவுப் பொருட்கள் பயன்படுத்துவதை நோக்கி நகர்ந்து வருகிறார்கள். அதுமட்டுமல்ல, ஃபிரிட்ஜ் பயன்பாடு பரவலான பிறகு, சமைத்த உணவை 2 நாட்கள், 3 நாட்கள் வரை ஃபிரிட்ஜில் வைத்திருந்து, பிறகு அதை எடுத்து சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கமும் அதிகரித்துள்ளது.
அதில் சில உணவுகளை நாம் ஃபிரிட்ஜில் வைத்திருந்து, அதை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும்போது பல ஆபாயங்கள் உள்ளன. அந்த வகையில், இப்படி சமைத்த சாம்பாரை ஃப்ரிட்ஜில் வைத்து சூடாக்கி சாப்பிட்டால் கேன்சர் அபாயம் உள்ளது என்று மருத்துவர் கு. சிவராமன் எச்சரிக்கிறார். அதனால் உஷார் மக்களே!
பாரம்பரிய உணவுகளில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து அறிவியல் மொழியில் பேசி பரப்பி வருகிறார் மருத்துவர் கு. சிவராமன். கடைகளில் பாக்கெட்டில் விற்கப்படும் சாம்பார் பொடியைப் போட்டு சமைத்த சாம்பாரை ஃப்ரிட்ஜில் வைத்து சூடாக்கினால் கேன்சர் அபாயம் உள்ளது என்று சிவரிதா ச்ஷார்ட்ஸ் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள ஷார்ட்ஸ் வீடியோவில் மருத்துவர் கு. சிவராமன் எச்சரிக்கிறார்.
இது குறித்து மருத்துவர் சிவராமன் கூறியிருப்பதாவது: “சாம்பார் பொடி கடையில் எளிதாகக் கிடைக்கிறது. இந்த ரெடிமேடான சாம்பார் பொடி கலவையில் சோடியம் பென்சவேட் இருக்கும். இந்த சோடியம் பென்சவேட்டை 0.1% சேர்க்க வேண்டும் என்பார்கள். ஆனால், நிச்சயமாக யாரும் 0.1% சேர்க்கமாட்டார்கள், கூடுதலாகத்தான் சேர்ப்பார்கள். அதில் சாம்பார் வைத்து, அப்போதே சாப்பிட்டால்கூட ஒன்றும் பிரச்னை இல்லை. மீதியான அந்த சாம்பாரை ஃபிரிட்ஜுக்கு உள்ளே வைத்துவிடுவார்கள். பிறகு, அந்த சாம்பாரை எடுத்து மீண்டும் சூடாக்கி கொதிக்க வைப்பார்கள். அப்போது, அந்த சோடியம் பென்சவேட்டில் இருந்து பென்சீன் வெளியே வரும். இந்த பென்சீன் நேரடியாகவே புற்றுநோய்க்கு காரணமாகிறது” என்று எச்சரிக்கிறார்.
அதனால், மக்களே கடையில் விற்கப்படும் ரெடிமேடு சாம்பார் பொடியை வாங்கி அதில் சாம்பார் செய்து, அதை ஃபிரிட்ஜில் வைத்திருந்து, பிறகு அதை எடுத்து மீண்டும் சூடாக்கி சாப்பிடாதீர்கள். அப்படி சாப்பிட்டால், புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்று மருத்துவர் கு. சிவராமன் எச்சரிக்கிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.