Advertisment

5 நிமிடத்தில் காலை உணவு: பிசியான மக்கள் இதைக் கவனியுங்க!

காலை உணவை தவிர்ப்பதால், சர்க்கரை நோய்கூட ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 5 நிமிடங்களில் செய்யக்கூடிய 3 வகையான ஆரோக்கியமான காலை உணவை எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

author-image
WebDesk
New Update
5 நிமிடத்தில் காலை உணவு: பிசியான மக்கள் இதைக் கவனியுங்க!

இந்த பரபரப்பான வாழ்கையில் காலை உணவை நாம் பெரும்பாலும் தவிர்த்துவிடுகிறோம். ஆனால் காலை உணவு மிகவும் முக்கியம். காலை உணவை தவிர்ப்பதால், சர்க்கரை நோய்கூட ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 5 நிமிடங்களில் செய்யக்கூடிய 3 வகையான ஆரோக்கியமான காலை உணவை எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

Advertisment

மலாய் டோஸ்ட்

பிரட் துண்டுகளை எடுத்துக்கொள்ளவும். அதற்கு மேல் மலாய் அல்லது க்ரீமை தடவிக்கொள்ளவும். வாழைப்பழ துண்டுகள் மற்றும் கார்ன் ப்ளேக்ஸ் இருந்தால் அதை நொறுக்கி பிரட் மேல் தூவவும். சுவையான மலாய் டோஸ்ட் ரெடி  

வாழைப்பழம் ஹாட் டாக்

ஹாட் டாக் செய்யும் பன்களை எடுத்துகொள்ளுங்கள். அதன் மீது வேர்கடலை பேஸ்ட்/பீநட் பட்டர் தடவிக் கொள்ளுங்கள். பன்களுக்கு நடுவில் வாழைப்பழம், ஸ்ட்ராபெரி ஆகியவற்றை வைத்து சாப்பிடலாம்.

முட்டை மற்றும் பால் வைத்து காலை உணவு

2 முட்டை மற்றும் சிறிதளவு பால் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். அதை அவனில் வைத்து 45 நிமிடங்கள் சுடவைக்கவும். இதைத்தொடர்ந்து அதை கிளரிவிடவும். தொடர்ந்து 30 நிமிடங்கள் வரை அவனில் வைக்கவும். இதன் மேலாக சீஸ், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்துகொள்ளவும்.  

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment