Advertisment

Diabetes: டோன்ட் வொர்ரி... தீபாவளிக்கு சுவையான 3 சுகர் ஃப்ரீ ஸ்வீட்ஸ் இப்படி பண்ணுங்க!

தீபாவளி என்றாலே இனிப்பும் பலகாரமும்தான். ஆனால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இனிப்பை சாப்பிட முடியாமல் தவிப்பார்கள். அவர்களுக்காக மூன்று சுகர் ஃப்ரீ ஸ்வீட் ரெசிபியை தெரிந்துகொள்ளலாம்.

author-image
WebDesk
New Update
Diabetes: டோன்ட் வொர்ரி... தீபாவளிக்கு சுவையான 3 சுகர் ஃப்ரீ ஸ்வீட்ஸ் இப்படி பண்ணுங்க!

தீபாவளி என்றாலே இனிப்பும் பலகாரமும்தான். ஆனால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இனிப்பை சாப்பிட முடியாமல் தவிப்பார்கள். அவர்களுக்காக மூன்று சுகர் ஃப்ரீ ஸ்வீட் ரெசிபியை தெரிந்துகொள்ளலாம்.

Advertisment

தேங்காய் பர்பி

துருவிய தேங்காய்

வெல்லம் உடைத்தது

எண்ணெய்

பால்( ஸ்கிம்ஸ்டு மில்க்)



publive-image

செய்முறை

துருவிய தேங்காயை பாத்திரத்தில் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். அத்துடன் பால் ஊற்றி சிறிது நேரம் வேக வைக்கவும். சிறிது நேரம் கழித்து பாலை வடிகட்டி அதை தனியாக எடுத்துக்கொள்ளவும். தற்போது தேங்காய்யை தனியாக எண்ணெய் சேர்த்து வறுக்கவும். தற்போது இதை வைகட்டி பாலில் வெல்லம் சேர்த்த பிறகு ஒன்றாக சேர்க்கவும்.  பெரிய பாத்திரத்தில் இந்த கலவையை ஊற்றி வைக்கவும். பிறகு பர்பி வடிவில் வெட்டி எடுக்கவும்.

மைசூர் பாக்

கடலை மாவு – 1 கப்

பட்டர் அல்லது நெய்- 1 கப்

வெல்லம் – 1 கப்

செய்முறை:

கடலை மாவை குறைந்த தீயில் வறுக்க வேண்டும்,  தற்போது நெய்யை எடுத்து இதில் கலந்துகொள்ளவும். கட்டியாக இல்லாமல் சமமாக கலந்துகொள்ளவும். தற்போது வெல்லத்தை வைத்து பாகை உருவாக்கவும். இந்த பாகை கடலை மாவுடன் மெதுவாக சேர்க்க வேண்டும். தற்போது நீளமான பாத்திரத்தில் வெண்ணை தடவி, அதில் இந்த கலவையை ஊற்ற வேண்டும் ஒரு மணி நேரம் கழித்து வெட்டி எடுத்தால் மைசூர் பாக் ரெடி.

publive-image

 லட்டு

பாதாம் – 1 கப்

முந்திரி- ½ கப்

வால்நட்- ½ கப்

பிஸ்தா- ½ கப்

தேங்காய் துருவியது

உலர் திராட்சை

பேரிச்சம்பழம்

செய்முறை

பரிந்துரைக்கப்பட்ட எல்லா பருப்பு மற்றும் உலர் பழங்களையும் மெல்லிய தீயில் வறுக்கவும் இதை அரைத்து கொள்ளவும். தற்போது நெய் ஊற்றி இந்த கலவையை வறுக்கவும். சூடு ஆறியதும் உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment