Advertisment

சுகர் பிரச்னை தீர 25 முதல் 100 கிராம் வெந்தயம்: இப்படி பயன்படுத்திப் பாருங்க!

வெந்தயம் நமது சமையலுக்கு உபயோகமான உணவுப் பொருள். வத்தல் குழம்பு, ஊறுகாய் இப்படி பல உணவுகளில் சேர்த்து நாம் வெந்தயத்தை சாப்பிடுவோம். இந்நிலையில் வெந்தயம் விதைகளில் இருக்கும் மருத்துவ குணம், வெந்தயக் கீரையிலும் இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சுகர் பிரச்னை தீர 25 முதல் 100 கிராம் வெந்தயம்: இப்படி பயன்படுத்திப் பாருங்க!

வெந்தயம் நமது சமையலுக்கு உபயோகமான உணவுப் பொருள். வத்தல் குழம்பு, ஊறுகாய் இப்படி பல உணவுகளில் சேர்த்து நாம் வெந்தயத்தை சாப்பிடுவோம். இந்நிலையில் வெந்தயம் விதைகளில் இருக்கும் மருத்துவ குணம், வெந்தயக் கீரையிலும் இருக்கிறது.

 மேலும் இதில் ஃபோலிக் ஆசிட், ரிபோஃபிலாவின், காப்பர், கால்ஷியம், இரும்பு சத்து இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் ஏ, பி6, சி, கே இருக்கிறது. இதனால் சத்தில் இருக்கும் சக்கரை அளவு குறைவாதாக கூறப்படுகிறது. மேலும் 25 முதல் 100 கிராம் வரை வெந்தயம் எடுத்துக்கொண்டால் சக்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நமது உடலுக்கு  குளுக்கோஸ் சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது. இதில் இருக்கும் கரையக்கூறிய நார்சத்து, ஜீரணத்தை மெதுவாக்கி, கார்போஹைட்ரேட்டை குறைவாக ஜீரணிக்க வைக்கிறது.

மேலும் ரத்தத்தில் சக்கரை வேகமாக அதிகரிக்காமல் தடுப்பதால் இதை கவலை இல்லாமல் சாப்பிடலாம். இதில் இன்சுலின் சுரப்பதை ஊக்குவிக்கும் குணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதில் இருக்கும் சாப்போனின்ஸ் என்ற பொருள் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. நமது உணவு வகைகளில் வெந்தயத்தை சேர்த்தும் சாப்பிடலாம் அதுபோலவே இரவு முழுவதும் வெந்தயத்தை ஊறவைத்து , அடுத்த நாள் அந்நீரை குடிக்கலாம்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment