Advertisment

தொப்பை குறையணுமா? இரவில் தூங்கும் முன்பு இதைச் சாப்பிடுங்க!

இந்நிலையில் உணவுக் கட்டுப்பாடு என்றால், சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்றல்ல. சரியான அளவு உணவை சரியான நேரத்தில் எடுத்துகொள்ள வேண்டும். இந்நிலையில் எந்த உணவுகளை இரவில் எடுத்துகொள்ளலாம் என்பதில்தான் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

author-image
WebDesk
New Update
தொப்பை குறையணுமா? இரவில் தூங்கும் முன்பு இதைச் சாப்பிடுங்க!

உடல் எடையை குறைப்பது, எளிதான விஷயம் இல்லை. பல மாதங்கள் தொடர்ந்து உணவுக் கட்டுப்பாடு மற்று  முறையான உடல் பயிற்சி செய்தால் மட்டுமே உடல் எடை குறையும். இந்நிலையில் உணவுக் கட்டுப்பாடு என்றால், சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்றல்ல. சரியான அளவு உணவை சரியான நேரத்தில் எடுத்துகொள்ள வேண்டும்.

Advertisment

இந்நிலையில் எந்த உணவுகளை இரவில் எடுத்துகொள்ளலாம் என்பதில்தான் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

தயிர்

இதில் அதிக புரத சத்து இருப்பதால் உடலுக்கு தேவையான அனைத்து சக்தியை தருகிறது. இதில் குறைவாக கலோரிகள் இருப்பதால் தசைகளுக்கு பலம் தரும். மேலும் செரிமானத்திற்கு உதவும்.

பாதாம்

இரவில் பசித்தால், நொறுக்கித்தீனியை சாப்பிடுவதற்கு பதிலாக, பாதாம் பருப்பை சாப்பிடலாம்.  ஊறவைத்த பாதம் பருப்பு உடலுக்கு நல்லது. எடை குறைக்கவும் இது உதவுகிறது.

முழு தானிய ரொட்டி

கடலை எண்ணேய் தடவிய, முழு தானிய ரொட்டி தயாரித்து சாப்பிடவும். முழு தானிய ரொட்டி உடலுக்கு அதிக சக்தியை தருகிறது.

வாழைப்பழம்

இரவு உணவை தவிர்ப்பவர்கள், வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இதில் நீர்சத்து மற்றும் ஊட்டசத்து இருப்பதால் உடலுக்கு நன்மை தருகிறது.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment