ஹீமோகுளோபின் குறைபாடு குறிப்பாக இந்தியாவில் அதுவும் பெண்களில் அதிகம் காணப்படுகிறது. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வெளியிலிருந்து இரும்புசத்து மாத்திரைகள் எடுத்துகொண்டாலும், உணவில் சில உணவுகளை நீங்கள் நிச்சயம் சேர்த்துகொள்ள வேண்டும்.
ரத்த அணுக்களில் உள்ள இரும்பு சத்து நிறைந்த புரோட்டின்தான் ஹீமோகுளோபின். இவை ஆக்ஸிஜனை எல்லா உறுப்புகளுக்கு எடுத்து செல்கிறது.
ஆண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 13.5 முதல்17.5 வரை இருக்கவேண்டும் .இதுவே பெண்களுக்கு 12.0 முதல் 15.5 கிராம் வரை இருக்க வேண்டும்.
டேட்ஸ்/ பேரிச்சம்பழம்
எரித்ரோசைட்ஸ் அதிகரிப்பதில் பேரிச்சம்பழம் பெரும் உதவி புரிகிறது. இதனால் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். இத்தோடு வைட்டமின் சி, வைட்டமின் பி காம்பிளக்ஸ், போலிக் ஆசிட் ஆகியவை ரத்த அணுக்கள் உருவாக உதவுகிறது.
உலர் திராட்சை
இதில் இரும்புசத்து, காப்பர் சத்து இருப்பதால் ரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது.
தினை வகைகள்
உலகளவில் தினை வகைகள் சாப்பிடுவதால், ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது.
எள்
இதில் அதிக சத்துக்கள் இருக்கிறது. தொடர்ந்து சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது.
இதுபோல நாவல் பழம், உலர் ஏப்ரிகாட், ராகி, புளி கரைசல், வேர்கடலை ஆகியவற்றை சாப்பிட்டாலும் , ஹீமோகுளோபின் அளவு அதிகமாகும்.