scorecardresearch

பாரம்பரிய சுவையில் பூண்டு முறுக்கு.. ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி

பூண்டு முறுக்கு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Garlic murukku
Garlic murukku

முறுக்கு வகைகள் பலருக்கும் பிடிக்கும். ஈவ்னிங் ஸ்நாக்ஸாக சாப்பிட நன்றாக இருக்கும். பெரும்பாலும் முறுக்கு கடைகளில் வாங்கி சாப்பிடுவோம், ஆனால் வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம். பூண்டு முறுக்கு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்

தேவையான பொருட்கள்

கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1 கப்
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
எள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
காய்ந்த மிளகாய் – 5
பூண்டு – 8
வெண்ணெய் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரம் எடுத்து காய்ந்த மிளகாய், பூண்டு போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக மசிக்கவும். மற்றொரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயம், சீரகம், எள், உப்பு சேர்த்து கலக்கவும். பின் வெண்ணெய் சேர்த்து பிசைந்து அரைத்த பூண்டு மிளகாய் சேர்த்து கலக்கவும். மாவை முறுக்கு பிடியில் போட்டு விருப்பமான வடிவத்தில் சுற்றி வைக்கவும்.

இப்போது ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் முறுக்கை மாவை போட்டு பொன் நிறமாக வேகவைத்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான பூண்டு முறுக்கு ரெடி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Garlic murukku recipe making in tamil