ghee or butter which is best ; நம்மில் பலர் வெண்ணை மற்றும் நெய்யை உணவில் சேர்த்துகொள்ள பயப்படுகிறோம்.இரண்டிலும் அதிக கொழுப்பு சத்து இருக்கிறது என்பதால் மருத்துவர்கள் இதை உணவில் சேர்த்துகொள்ள பெரிதாக ஊக்கப்படுத்துவதில்லை. எனினும் இவை இரண்டிலும் பல நன்மைகள் இருக்கிறது. இந்த இரண்டில் நமக்கு எது சிறந்தது என்பதை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
வைட்டமின் ஏ, வைட்டமின் இ, ஆன்டி ஆக்ஸிடண்ட் , ரிபோஃபிலவின் (riboflavin) , கால்ஷியம் இவை நெய் மற்றும் வெண்ணையில் அதிகம் இருக்கிறது.
வெண்ணையில் இருக்கும் சத்துக்கள் நமது கண் பார்வையை மேலும் நன்றாக்குகிறது. மேலும் வயிறு மற்றும் மார்பக புற்றுநோய் ஏற்படமால் தடுக்கிறது.
நெய்யில் இருக்கும் நன்மைகள் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பு தொடர்பான நோய்களை குணமாக்க உதவுகிறது.
வெண்ணையைவிட நெய்யில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு சத்து இருக்கிறது. ஒரு ஸ்பூன் நெய்யில் 120 கலோரிகளும், அதுவே வெண்ணையில் 102 கலோரிகள் இருக்கின்றது.
பால் தொடர்பான புரோட்டின்கள் நெய்யில் அதிகம் இருப்பதால், பால் பொருட்கள் உடலுக்கு ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை பயன்படுத்தலாம். நீங்கள் பால் மற்றும் பால் தொடர்பான பொருட்களை எடுத்துக்கொண்டால் நெய்யிக்கு பதிலாக வெண்ணை சேர்த்துக் கொள்வது சிறந்தது.
நெய்யில் சிறிது உப்பு தன்மையிருப்பதால், கேக், ரொட்டி போன்ற வகை உணவுகளில் சேர்த்துக்கொள்வது சுவையை கெடுத்துவிடும். எனவே அப்போது வெண்ணை பயன்படுத்துவது சரியான தேர்வாக இருக்க முடியும்.