கேரளாவின் பாரம்பரிய இஞ்சித் தீயலை நாம் வீட்டிலேயே செய்ய முடியும். அதன் எளிமையான ரெசிபி இதோ.
தேவையான பொருட்கள்
தேங்காய் துருவியது
இஞ்சி
மிளகு
கருவேப்பிலை
உப்பு
மிளகாய் வத்தல்
சின்ன வெங்காயம்
வெல்லம்
செய்முறை
இஞ்சியை சுத்தம் செய்து அதை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். சின்ன வெக்காயத்தை தோல் நீக்கி இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில், இஞ்சி, தேங்காய், சின்ன வெங்காயம், கருவேப்பிலை, வத்தல், மிளகு சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து12 நிமிடங்களாவது மிதமான சூட்டில் வறுக்க வேண்டும்.
அதிக தீயில் சமைத்தால் எல்லாம் கரிந்துவிடும். இதனால் அருகில் இருந்து கவனமாக வறுக்க வேண்டும்.
வறுத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்திருப்பதை சேர்க்க வேண்டும். தற்போது அதில் உப்பு சேர்த்து கொள்ளுங்கள். தொடர்ந்து மெதுவாக சேர்த்து கிளறவும். எண்ணெயை பிரிந்து வரும் வரை காத்திருங்கள். சுவையான கேரளா ஸ்பெஷல் இஞ்சி தீயல் தயார்!!!