Advertisment

நீளமான முடி விரும்பும் பெண்கள்; இந்த 3 ஜூஸ் மறக்காதீங்க!

நீளமாக, அடத்தியாக முடி வளர்க்க பெரும்பாலான பெண்கள் விரும்புவர். ஆனால் மாசு, உணவு பழக்கங்கள் போன்றவற்றால் முடி உதிர்தல், முடி வெடிப்பு ஏற்படுகிறது. இந்த சிக்கல்களை தீர்க்க மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள், எளிய முறைகளை இங்கு பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hair care tips

Aloe Vera hair oil for extreme hair growth

பெரும்பாலான பெண்களுக்கு முடி நீளமாக, அடத்தியாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. நாமும் பலவித எண்ணெய், ஷாம்பு பயன்படுத்தி இருப்போம். ஆனாலும் பயன் கிடைத்ததா என்பது தெரியாது. அன்றாட தலைமுடி பராமரிப்பு அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆரோக்கியமான முடி வளர்க்க தொடர்ந்து சில விஷயங்கள் பின்பற்ற வேண்டும்.

Advertisment

அந்த வகையில் ஆரோக்கியமான, முடிக்கு உகந்த பராமரிப்பு பொருட்கள் பயன்படுத்த வேண்டும். முறையாக எண்ணெய் தேய்க்க வேண்டும். சரியான நேரத்தில் முடி டிரிம்மிங் செய்ய வேண்டும், ஆரோக்கியமான உணவு பழக்கம் என சில விஷயங்களை பின்பற்ற வேண்டும்.

ஆலோசகர் ஊட்டச்சத்து நிபுணர் ரூபாலி தத்தா கூறுகையில், "முடி ஆரோக்கியம் மற்றும் அதன் வளர்ச்சியில் மரபியல் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனாலும் சில எளிய மற்றும் ஆரோக்கியமான உணவு உத்திகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் முடியை நன்கு பராமரிக்க முடியும்.

குறிப்பாக உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அன்றாட உணவில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சேர்க்க வேண்டும்" என்று தெரிவித்தார். ஜூஸ் அனைவருக்கும் பிடித்த ஒன்று, குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பி குடிப்பர். சில ஜூஸில் வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளது. இது முடி வளர்ச்சிக்கு உதவும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கற்றாழை ஜூஸ்

கற்றாழையில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ உள்ளன. இந்த மூன்று வைட்டமின்களும் செல் வளர்ச்சிக்கு அவசியமானவை. ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கும் உதவும்.

கற்றாழை ஜூஸ் செய்வது எப்படி?

கற்றாழை ஜூஸ் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. 20 மில்லி கற்றாழை ஜெல் (செடியிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்) எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்கலாம். துளசி, நெல்லிக்காய் ஆகியவற்றையும் கற்றாழையோடு கலந்து குடிக்கலாம்.

வெள்ளரிக்காய் ஜூஸ்

வெள்ளரிக்காயில் உள்ள வைட்டமின் ஏ ஸ்கால்ப்புக்கு உதவி, முடி வேகமாக வளரச் செய்கிறது. முடி ஆரோக்கியமானதாகவும் உள்ளது.

வெள்ளரிக்காய் ஜூஸ் செய்வது எப்படி?

இரண்டு வெள்ளரிகளை உரித்து, இரண்டையும் 2-3 துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். மிக்ஸியில் போட்டு தண்ணீர், புதினா இலைகள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து அரைத்து பருகலாம்.

கேரட் ஜூஸ்

கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ நிரம்பியுள்ளது, இந்த இரண்டு சத்துக்களும் முடி வளர்ச்சியைத் தூண்ட உதவுகிறது. இளநரையிலிருந்தும் பாதுகாக்கிறது. அடர்த்தியான மற்றும் நீளமான கூந்தல் பெற தினசரி உணவில் கேரட் ஜூஸ் எடுத்து கொள்ளுங்கள்.

கேரட் ஜூஸ் செய்வது எப்படி?

மூன்று கேரட்டின் மேல் தோலை உரித்து, நறுக்கி மிக்ஸியில் போட வேண்டும். எலுமிச்சை சாறு, புதினா இலைகள், உப்பு சேர்த்து தண்ணீர் கலந்து அரைத்து பருகி மகிழலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment