Advertisment

எலும்புக்கு வலு சேர்ப்பது முதல் எடை இழப்பு வரை; உங்கள் உணவில் கண்டிப்பா சோளம் சேருங்க

சோளம்’ கோதுமையை விட ஜீரணிக்க எளிதானது, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Health tips

cholam health benefits

சோளம் என்றவுடன் பலருக்கும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் மக்காச்சோளம்  தான் நினைவுக்கு வரும், ஆனால் சிறுதானிய வகையில் குறிப்பிடும் சோளம் அதுவல்ல. அது இன்னும் சிறியதாகவும், வெள்ளை சிகப்பு நிறத்திலும் இருக்கும். இதை தமிழில் சிறுசோளம் என்றும் கூறுவர்.

Advertisment

நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்த சோளம்’ உங்கள் இதயம், இரத்த சர்க்கரை அளவு மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கான பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆயுர்வேத நிபுணர் டிக்ஸா பாவ்ஸர் அதன் பல நன்மைகளை விளக்குகிறார்.

publive-image

சோளம்’ கோதுமையை விட ஜீரணிக்க எளிதானது, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் செரிமான பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது. அதில் கால்சியம் தாராளமாக இருப்பதால், சோளம் சாப்பிடுவது உங்கள் எலும்புகளை பலப்படுத்தும்.

இதில் உள்ள உயர் நார்ச்சத்து உங்கள் எடை இழப்பு இலக்குகளை அடைய உதவுகிறது; இது மனநிறைவையும் மேம்படுத்துகிறது, அதனால் நீங்கள் ஆரோக்கியமற்ற உணவுகளால் பாதிக்கப்படுவதில்லை.

சோளம், உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது மற்றும் நல்ல கொழுப்பை மேம்படுத்துகிறது. உங்கள் ஆற்றல் அளவை பராமரிக்கிறது.

சோளம் சாப்பிடுவது உங்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மற்றும் நச்சுத்தன்மை நீக்க உதவுகிறது. இது தோல் பாதிப்புக்கு நல்லது என்று கருதப்படுகிறது.

கஞ்சி, ரொட்டி, கேக், மிளகாய், குக்கீஸ், ரொட்டி போன்றவற்றில் சோளத்தை பயன்படுத்தலாம்.

சோளத்தை முழுதாக அல்லது உடைத்து, வேகவைத்து சாதமாகச் சாப்பிடலாம். அரைத்து மாவாக்கி, சப்பாத்தியாகவும் செய்யலாம். ஆனால், மூல நோய் உள்ளவர்கள் சோளத்தைத் தவிர்ப்பது நல்லது.

சிறுசோளத்தில் சோறு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்

முதலில் சிறுசோளத்தை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின் பாத்திரத்தில் ஒரு கப் சோளத்திற்கு 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். மண்பானையில் சமைத்தால் இன்னும் சுவையுடனும், மனமுடன் இருக்கும்.

20 நிமிடங்களில் இந்த சோள சோறு தயாராகிவிடும். நீங்கள் வழக்கமாக வெள்ளை அரிசி சாதத்திற்கு வைத்து சாப்பிடும் குழம்புகள் இதுக்கும் நல்ல காம்பினேஷனாக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment