உங்கள் நாளை ஒரு சத்தான உணவுடன் தொடங்க விரும்பினால், ஊட்டச்சத்து நிபுணர் அர்ஜிதா சிங் பகிரும், நிறைய காய்கறிகள் மற்றும் குறைந்த எண்ணெயுடன் கிரிஸ்பி ஊத்தப்பம் ரெசிபி இங்கே உள்ளது.
இதை எப்படி செய்வது?
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது நெய் அல்லது எண்ணெய் தடவிய பிறகு கடாயில் ஊத்தப்பம் மாவை ஊற்றவும். பின்னர், மாவின் மேல் உங்கள் விருப்பப்படி துருவிய காய்கறிகளை தூவி, லேசாக அழுத்தி விடவும். பிறகு ஒரு சிட்டிகை உப்பு, மிளகு அல்லது சிவப்பு மிளகாய் தூள் தூவவும்.
ஒரு பக்கத்தில் 5 நிமிடங்கள் சமைக்கவும், பின்னர் அதை புரட்டி மேலும் 2-3 நிமிடங்கள் சமைக்கவும். மிதமான தீயில் வைக்கவும்.
சுவையான ஊத்தப்பம் ரெடி.
தேங்காய் சட்னி மற்றும் சாம்பார் உடன் இதை பரிமாறவும்.
அதிக புரதம் சேர்க்க விரும்பினால், ஊத்தப்பத்தில் காய்கறிகளுடன் அரைத்த பனீர் அல்லது டோஃபுவைச் சேர்க்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“