Advertisment

காய்கறி வாங்க வேண்டாம்... டேஸ்டி கருவேப்பிலை குழம்பு இப்படி செய்து பாருங்க!

ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கறிவேப்பிலையில் சுவையான கறிவேப்பிலை குழம்பு எப்படி செய்யலாம் என்பதை பாருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil recipe

Healthy Curry leaves kuzhambu Recipe in Tamil

பொதுவாக உணவில் நறுமணத்திற்காக சேர்க்கப்படும் கறிவேப்பிலையை நாம் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையில் இருக்கும் நன்மைகள் ஏராளம். வைட்டமின் ஏ, பி, பி2, சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை கறிவேப்பிலையில் நிறைந்துள்ளது.

Advertisment

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு, நல்ல கொழுப்புகளை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்னையில் இருந்து பாதுகாப்பு தரும். கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடி நன்கு கருமையாக இருக்கும்.

இப்படி ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கறிவேப்பிலையில் சுவையான கறிவேப்பிலை குழம்பு எப்படி செய்யலாம் என்பதை பாருங்கள்!

தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி

காய்ந்த மிளகாய் – 2

மிளகு – ஒரு ஸ்பூன்

துவரம்பருப்பு – ஒரு ஸ்பூன்

கடுகு – ஒரு ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்

எண்ணெய் – 50 கிராம்

உப்பு – ஒரு ஸ்பூன்

புளி – எலுமிச்சை பழ அளவு

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து

செய்முறை

முதலில் கறிவேப்பிலையை நன்கு கழுவி உலர வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு, அடுப்பில் கடாய் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் சேர்த்து நன்றாக காய்ந்ததும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதை தனியாக எடுத்து வைக்கவும்.

பிறகு அதே கடாயில் வர மிளகாய், உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் மிளகு சேர்த்து மிதமான தீயில், அனைத்தையும் பொன்னிறமாக வறுக்கவும். ஏற்கெனவே வதக்கி வைத்த கறிவேப்பிலையுடன் இதையும் சேர்த்து வைக்கவும்.

இவை அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து, அதனுடன் புளியையும் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு கிண்ணத்தில் மாற்றி, கலவையுடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைக்கவும்.

மறுபடியும் அடுப்பில் கடாய் வைத்து சூடானதும், அதில் கடுகு சேர்த்து தாளித்ததும், மசாலா கரைசலை சேர்த்து நன்றாகக் கொதிக்க விட வேண்டும்.

இறுதியாக கொத்தமல்லி சேர்க்கவும். சிறிது நேரம் இதனை கொதிக்க விட்டால் போதும். சுவையான கறிவேப்பிலை குழம்பு ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment