கோதுமையை ஊறவைத்து... ஒரு முறை இப்படி பாயாசம் செய்து பாருங்க!
இனிப்பு என்பது எப்போதுமே மனத்திற்கு நிறைவான விஷயம்தான். இதில் பாயாசம் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். இந்நிலையில் எப்படி கோதுமை பாயாசம் செய்வது என்பதை பார்க்கலாம்.
இனிப்பு என்பது எப்போதுமே மனத்திற்கு நிறைவான விஷயம்தான். இதில் பாயசம் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். இந்நிலையில் எப்படி கோதுமை பாயசம் செய்வது என்பதை பார்க்கலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்
கோதுமை ரவை – 1/2 கப் – 50g
வெல்லம் – 1 கப் – 250g
நெய் – 2 மேஜைக்கரண்டி
முந்திரிப் பருப்பு – 1/4 கப்
தேங்காய் – 1/4 கப்
பால் – ஒரு கப் – 250ml
ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் வெல்லம் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை அணைத்து தனியே எடுத்து வைக்கவும். ஒரு அகலமான பேனில் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் அரை கப் கோதுமை ரவையை கழுவி சேர்த்துக் கொள்ளவும். மிதமான தீயில் வைத்து கோதுமை ரவையை வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதனுடன் 3 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து 15 முதல் 20 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்/ பஞ்சு போன்று நன்றாக வேகும் வரை வைக்கவும். மற்றொரு பானில் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் கால் கப் முந்திரிப்பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
அதனுடன் கால் கப் அளவு தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். தேங்காய் லேசாக பொன்னிறமாகும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். கோதுமை ரவை நன்கு வெந்தபிறகு அதனுடன் தயார் செய்து வைத்துள்ள வெல்ல பாகை வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும். வெல்லமும், கோதுமை ரவையும் ஓரளவு திக்காகும் வரை வேக வைத்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு கப் காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்துக் கிளறவும். கொதிக்க ஆரம்பித்த பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு மற்றும் தேங்காய் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் கால் தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்து ஒரு நிமிடத்திற்கு பின்னர் அடுப்பை அணைத்து விடவும். சுவையான மற்றும் ஆரோக்கியமான கோதுமை பாயசம் தயார்.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news