Advertisment

சுகர் பேஷண்ட்ஸ் மது குடிக்கலாமா? எவ்ளோ குடிப்பது? மருத்துவர் விளக்கம்

அவரிடம் தொடர்ந்து கேட்கப்படும் கேள்வியாக இருப்பது, சர்க்கரை நோயாளிகள் மது குடிக்கலாமா? என்பதுதான். அப்படி குடித்தால் எப்போது, எவ்வளவு அளவு குடிக்க வேண்டும் என்ற கேள்விகள்தான் தொடர்ந்து கேட்கப்படுவதாக கூறுகிறார். டைப் 2 டயபடீஸ் நோயால் பாதிக்கப்படும், மது பழக்க உள்ளவர்கள், தங்களுக்கு இந்த நோய் வருவதற்கு மது பழக்கம் காரணம் என்று கருதுகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சுகர் பேஷண்ட்ஸ் மது குடிக்கலாமா? எவ்ளோ குடிப்பது? மருத்துவர் விளக்கம்

சர்க்கரை நோயாளிகள் என்ன உணவை தேர்வு செய்வதுதொடர்பாக பல ஆலோசனைகளை, நோயாளிகளுக்கு வழங்குவதில் அதிக நேரம் செலவிட்டுள்ளதாக கூறுகிறார்,மேக்ஸ் ஹெல்த் மருத்துவமனையின் இயக்குநர்  மற்றும் உட்சுரப்பியல்- நீரழிவு மருத்துவரான அம்ரிஷ் மித்தல்.

Advertisment

அவரிடம் தொடர்ந்து கேட்கப்படும் கேள்வியாக இருப்பது, சர்க்கரை நோயாளிகள் மது குடிக்கலாமா?  என்பதுதான். அப்படி குடித்தால் எப்போது, எவ்வளவு அளவு குடிக்க வேண்டும் என்ற கேள்விகள்தான் தொடர்ந்து கேட்கப்படுவதாக கூறுகிறார். டைப் 2 டயபடீஸ் நோயால் பாதிக்கப்படும், மது பழக்க உள்ளவர்கள், தங்களுக்கு இந்த நோய் வருவதற்கு மது பழக்கம் காரணம் என்று கருதுகின்றனர்.

டைப் 2 டயபடீஸ் வருவதற்கு குடும்பத்தின் பாரம்பரியம், உடல் பருமன், வயது, உடல்பயிற்சியற்ற வாழ்வுதான் காரணமாக இருக்கிறது. மதுவுக்கும் – சர்க்கரை நோய்க்குமான தொடர்வு விவரிப்பதில் சில சிக்கல் இருக்கிறது. ஆண்களைவிட பெண்களுக்கு மதுவை ஏற்றுகொள்ளும் இயல்பு குறைவே. இதனால் உதாரணமாக 30 எம்எல் விஸ்கியை பெண்களும். 60 எம் எல் விஸ்கியை எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படாது. ஆனால் அதிகமாக குடித்தால் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதிகமாக குடித்தால் எடை அதிகரிக்கும் அதுவே சர்க்கரை நோய் ஏற்பட காரணமாக அமையலாம். குடிப்பதால் , கணையத்தில் வீக்கம் ஏற்பட்டு சர்க்கரை நோய் ஏற்படலாம்.

 சர்க்கரை நோயாளிகள் குடிப்பதை தவிர்ப்பது சரியா?

முடிந்தவரை சர்க்கரை நோயாளிகள் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. குடிப்பதால்,  அதிகமாக சாப்பிடலாம், மேலும் போதை அதிகமானால் நாம் என்ன செய்கிறோம் என்று தெரியாது. இதனால் மோசமான நிலைக்கு நாம் செல்வோம். குடிப்பதால், இதயம், கணையம், குடல் பாதிக்கப்படுகிறது. மது குடிப்பதால் நேரடியாக ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அதிகரிக்காது. ஆனால் இது ரத்ததில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பதால், பல உறுப்புகள் பாதிக்கப்படும்.  இதனால் உணவுடன் மது அருந்துவது, உணவு உட்கொள்ளாமல் மது அருந்துவதும் முக்கியமான பங்கு வகிக்கிறது.

நீங்கள் சாப்பிடாமல் இருக்கும்போது, கல்லீரல் குளுக்கோஸை ரத்ததில் வெளியேற்றும். இதனால் குளுக்கோஸ் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ளும். ஆனால் நீங்கள் இப்போது மது குடித்தால், மதுவை ரத்தத்தில் வெளியேற்றும் செயல் நடைபெறும் அது குளுக்கோஸ் வெளியேற்றத்தை பாதிக்கும். இத்துடன் சர்க்கரை நோய்க்கு வழங்கப்படும் மாத்திரைகளை எடுத்துகொண்டால், உங்களுக்கு ரத்த சர்க்கரை மிகவும் குறைந்துவிடும். இது அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் இரவில் நீங்கள் குடித்தால், சர்க்கரை  அளவை குடித்த பிறகு பரிசோதனை செய்ய வேண்டும். அப்படி சர்க்கரை அளவு குறைந்து இருந்தால், பழமோ அல்லது சான்விஜ் போன்ற உணவை சாப்பிடுவது நல்லது.

மதுவின் அளவு முக்கியம்

நீங்கள் குடிக்கும் மதுவில் எவ்வளவு ஆல்கஹால் இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். மதுபானங்களின் ஸ்டிக்கரில் உள்ள ஏபிவி அளவை கணக்கிட்டு தெரிந்துகொள்ளலாம்.  ஏபிவி அளவு 12 சதவிகிதம் இருந்தால் நீங்கள் குடிக்கும் மதுவில் 12 சதவிகிதம்  ஆல்கஹால் இருக்கிறது. மேலும் மதுபானத்தோடு பழச்சாறு கலந்து குடிப்பதால் ரத்த சர்க்கரை அதிகரிக்கும். இதனால் இதுபோன்று செய்வதை தவிர்க்கவும். இதனால் தண்ணீர் சேர்த்து குடிப்பதே நல்லது.

சைடிஷ் சாப்பிடுவது?

குடிக்கும்போது, பொரித்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். இது தேவையில்லாத கலோரிகளை உடலுக்கு வழங்குகிறது. இதனால் உடலுக்கு மேலும் பிரச்சனை ஏற்படும்.

ஒரு நாளில் 2 யூனிட்ஸ் மதுவை ஆண்களும் , ஒரு யூனிட் மதுவை பெண்களும் குடிக்கலாம். அதற்கு மேலே குடிக்க கூடாது.

உயர் ரத்த அழுத்தம், இதய, சிறுநீரக, கணையம் , கண்கள், நரம்பு உள்ளிட்டவை தொடர்பான நோய் இருந்தால் மதுவை தவிர்க்கவும்.

குடிக்கும்போது, அதிகபடியாக தண்ணீர் குடிக்கவும்.

வெறும் வயிற்றில் குடிப்பதை தவிர்க்கவும்.

பழச்சாறு போன்ற அதிக கலோரிகள் கொண்ட பானங்களுடன் மதுவை கலந்து குடிக்கவேண்டாம்.

குடிக்கும்போது குறைவாக சைடிங் சாப்பி வேண்டும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment