How to cut Jack fruit simple tips in Tamil: கோடை காலம் வந்துவிட்டாலே பலரும் தேடுவது பலாப்பழம் தான். அதன் டேஸ்டுக்கு பலர் அடிமை. எவ்வளவு விலை கொடுத்தாவது அதனை சுவைக்க வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு உண்டு. சிலர் பலாப்பழத்தில் பல்வேறு வகையான உணவுகளை செய்து சாப்பிடுவர். ஆனால் பெரும்பாலானோர் அப்படியே முழுமையாக சுவைக்கவே விரும்புவர்.
ஆனால், நல்ல சுவையான பலாப்பழத்தை வாங்குவதில் சிலருக்கு சிரமம் ஏற்படலாம். அதேபோல், அதனை வெட்டி எடுத்து சாப்பிடுவதற்குள் சிலருக்கு போதும் போதும் என்று ஆகிவிடும். ஆனால் இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், நீங்கள் உங்களுக்கு பிடித்த பலாப்பழத்தை எவ்வித சிரமமின்றி ஆனந்தமாக சுவைக்கலாம்.
இதையும் படியுங்கள்: புதினா, சீரகம் வடிநீர்: இதில் இவ்வளவு நன்மையா?
சுவையான பலாப்பழத்தை வாங்குவது எப்படி?
சுவையான பலாப்பழத்தை வாங்க முதலில் பலாப்பழத்தின் நிறத்தை கவனிக்க வேண்டும். நல்ல பச்சையாக இல்லாமல் சற்றும் மங்கிய பச்சை நிறத்தில் உள்ள பலாப்பழங்களை வாங்க வேண்டும். பலாப்பழத்தின் முட்கள் நன்றாக விரிந்து இருக்க வேண்டும். நீங்கள் பலாப்பழத்தின் அருகில் செல்லும் போது நல்ல மணம் வீச வேண்டும். இத்தகைய பலாப்பழமே சுவையாக இருக்கும்.
பலாப்பழத்தை எளிதாக நறுக்குவது எப்படி?
முதலில் தரையில் பலாப்பழத்தில் பால் (பிசின்) படாமல் இருக்கும் வகையில், செய்தி தாள் அல்லது வேறு துணிகளை கீழே விரித்து, அதன் மேல் பலாப்பழத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வெட்டப்போகும் கத்தி மற்றும் உங்கள் கைகளில் நன்றாக எண்ணெய் தேய்த்துக் கொள்ளுங்கள், அப்போது தான் பால் உங்கள் மேல் ஒட்டிக் கொள்ளாது.
அடுத்ததாக பலாப்பழத்தின் காம்பு முனைப் பகுதியில் சற்று கீழே வட்டமாக பலாப்பழத்தை கீறிக்கொள்ளுங்கள். பின்னர் அதிலிருந்து கீழாக, கோடு கோடாக, பலாப்பழத்தில் சிறிது இடைவெளி விட்டு வெட்டிக் கொள்ளுங்கள்.
பின்னர் அந்த இடைவெளிகளைப் பயன்படுத்தி மேல் தோலை நீக்கிக் கொள்ளுங்கள். இப்படி முழுமையாக தோலை நீக்கிக் கொள்ளுங்கள்.
இப்போது உங்களால் பலாச்சுளைகளை எளிமையாக எடுக்க முடியும். அவ்வளவு தான், இந்த எளிய வழிமுறைகளைப் பயன்படுத்தி, பலாப்பழத்தை ஈஸியா நறுக்கி, சாப்பிடுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.