Advertisment

சரியான வழியில் உடல் எடை குறைக்கணுமா? இதை மட்டும் எப்பவுமே மறக்காதீங்க

கொழுப்பை குறைக்கும்போது நீங்கள் நிச்சயமாக கார்போஹைட்ரேட்டை உணவில் குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால்தான், உங்களது கொழுப்பை உடல் பயிற்சியின்போது உடல் பயன்படுத்திகொள்ளும். இதனால் கொழுப்பு குறையும்.,

author-image
WebDesk
New Update
சரியான வழியில் உடல் எடை குறைக்கணுமா? இதை மட்டும் எப்பவுமே மறக்காதீங்க

நாம் சாப்பிடாமலோ அல்லது கடுமையான டயட் இருந்து நாம் உடல் எடை குறைப்போம். ஆனால் அது மீண்டும் காலப்போக்கில் அதிகமாகிவிடும். இந்நிலையில் கொழுப்பை மட்டும் குறைத்தால், உடல் எடை குறையாமல் இருக்குமா? என்ற கேள்வியும், கொழுப்பு குறைந்து உடல் எடை குறையாமல் இருக்குமா ? என்ற கேள்வியும் இயல்பாகவே எழும்.

Advertisment

உடல் எடை குறைவது என்பது  கொழுப்பை குறைப்பது என்று நாம் புரிந்துகொள்ளக் கூடாது. நமது உடல் என்பது தசைகள், எலும்புகள் மற்றும் தண்ணீரால் ஆனது.  நீங்கள் அதிகபடியான உடல் பயிற்சி செய்யலாம். இதனால் கொழுப்பு குறையும் ஆனால் உடல் எடை குறைய வேண்டும் என்பதில்லை. மேலும் சில அதிகமான எடையை தூக்கி உடல் பயிற்சி செய்யும்போது  உங்கள் தசையின் அளவு அதிகமாகலாம்.

மேலும் நீங்கள் குறைந்த கலோரிகளை சாப்பிடும்போது, கொழுப்பின் தேவை குறையும். இதனால் உடலில் உள்ள கொழுப்பின் அளவு குறையலாம். உதாரணமாக ஒருவருக்கு 2,000 கலோரிகள் தேவைப்படுகிறது. ஆனால் அவர் 1,500 கலோரிகளை மட்டுமே சாப்பிடுகிறார். இதனால் அவரது கொழுப்பு அளவு குறையலாம்.

ஆனால் நீங்க இழந்த எடையை அதிகரிக்காமல் இருப்பதற்கு ஒரு சரியான டயட்டை  நீங்கள்  பின்பற்ற வேண்டும். அதிகமான புரோட்டீன், கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்பு ஆகியவையின் அளவு மிகவும் முக்கியம். புரோட்டீன் அளவு அதிகரிப்பதால், நிச்சயமாக கொழுப்பு குறையும்.  மேலும் நீங்கள் உடல் பயிற்சி செய்வதற்கு முன்போ அல்லது செய்து முடித்த பிறகு கார்போஹைட்ரேட் சாப்பிட்டால், கார்போஹைட்ரேட் கொழுப்பாக மாறாமல் இருக்கும். இந்நிலையில் ஒரு நாளைக்கு நாம் சாப்பிடும் கொழுப்பின் கலோரிகள் 23 முதல் 35 சதவிகிதம் இருக்க வேண்டும்.  மேலும் 20 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்க கூடாது.

கொழுப்பை குறைக்கும்போது நீங்கள் நிச்சயமாக கார்போஹைட்ரேட்டை உணவில் குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால்தான், உங்களது கொழுப்பை உடல் பயிற்சியின்போது உடல் பயன்படுத்திகொள்ளும். இதனால் கொழுப்பு குறையும்.,

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment