/indian-express-tamil/media/media_files/2025/10/30/milagai-thokku-2025-10-30-10-53-41.jpg)
அவசரமான சமையல் நாட்களுக்கு அல்லது காலையில் தோசைக்கு தொட்டுக்கொள்ள புதுமையாக ஏதாவது தேவைப்படும்போது, நெல்லை ஃபேமஸ் மிகவும் பிரபலமான இந்த வறுத்த மிளகாய் பொடி (அ) வத்தல் பொடி ஒரு சரியான சாய்ஸ். மிகக் குறைந்த நேரத்திலேயே, தோசைக்கல்லில் தோசை சுடும் இடைவெளியிலேயே, இதை சட்டுன்னு தயாரித்து அசத்தலாம். இதில் சேர்க்கப்படும் பூண்டு மற்றும் கறிவேப்பிலையின் மணம், இதை வெறும் சைட் டிஷ்ஷாக மட்டும் இல்லாமல், ஒரு தனித்துவமான உணவாக மாற்றுகிறது. இந்த சுவையான டிஷ்ஷை எப்படி தயாரிப்பது என்று ஹோம்லி சுவை கிச்சன் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வரமிளகாய்
கறிவேப்பிலை
பூண்டு பற்கள்
உப்பு
எண்ணெய்
தண்ணீர்
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் கறிவேப்பிலையைச் சேர்த்து, மொறுமொறுப்பாகும் வரை வறுத்து எடுக்கவும். வறுத்த கறிவேப்பிலையை தனியாக ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளவும். அதே எண்ணெயில், நீங்கள் எடுத்து வைத்துள்ள வரமிளகாயைச் சேர்த்து, மிதமான தீயில் வைத்து, மிளகாய் பொன்னிறமாகவும், மொறுமொறுப்பாகவும் மாறும் வரை வறுக்கவும். இந்த மிளகாயை தனியே எடுத்துக் கொள்ளவும். வறுக்கும்போது மிளகாய் கருகாமல் பார்த்துக்கொள்ளவும்.
இப்போது வறுத்த வரமிளகாய், வறுத்த கறிவேப்பிலை, பூண்டு பற்கள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். இதில் சிறிது தண்ணீர் (1-2 தேக்கரண்டி) மட்டும் சேர்த்து, கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இது சட்னியை விட சற்றுத் தளர்வாக இருக்கும். இறுதியாக, மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை வறுத்த மீதி எண்ணெயைச் சேர்த்து நன்கு கிளறி, சுடச்சுட இருக்கும் தோசை, இட்லி அல்லது களியுடன் தொட்டுப் பரிமாறவும். இந்த டிஷ் உங்கள் காலை உணவுக்கு உடனடியாக ஒரு புதிய சுவையை சேர்க்கும்.
இந்த டிஷ் வீட்டில் எந்த பொருட்களும் இல்லாத நேரத்தில் செய்ய மிகவும் உதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி சமைக்கத் தெரியாத பேச்சுலர்ஸ்கூட இதை ஈஸியாக செய்து விடலாம். அதனால் இதை அடிக்கடி நீங்களும் உங்கள் வீட்டில் ட்ரை பண்ணுங்க.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us