புரதம், இரும்புச் சத்துக்கு பஞ்சமில்லை... இந்த லட்டுல ரெண்டை உள்ள தள்ளுங்க; செய்யறது ரொம்ப ஈஸி!

புரதம் மற்றும் இரும்புச்சத்து பிள்ளைகளுக்கு குறைவாக இருக்கா? அப்போ இந்த லட்டை தினமும் கொடுங்கள். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோரும் சாப்பிடலாம்.

புரதம் மற்றும் இரும்புச்சத்து பிள்ளைகளுக்கு குறைவாக இருக்கா? அப்போ இந்த லட்டை தினமும் கொடுங்கள். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோரும் சாப்பிடலாம்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
ladoo

ரொம்பவும் சுலபமான முறையில், ஆரோக்கியமான தினை அரிசியைப் பயன்படுத்தி இந்தச் சுவையான லட்டை வீட்டிலேயே செய்யலாம். இந்தத் தினை லட்டுவில் அதிக அளவு புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இது குழந்தைகளுக்கு ஒரு சிறந்த சிற்றுண்டியாக இருக்கும். கடைகளில் வாங்கும் லட்டை விட இது ஆரோக்கியமான மாற்று. இதனை 5 முதல் 6 நாட்கள் வரை சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம். இதனை எப்படி செய்வது என்று வந்தனா சமையல் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்:

தினை அரிசி (ஃபாக்ஸ்டைல் மில்லட்) - 2 கப் 
ஜாக்கெரி பவுடர் 
நெய்
முந்திரி பருப்பு 
தேங்காய் 

செய்முறை:

இரண்டு கப் தினை அரிசியை எடுத்து, தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ளவும். அரிசி மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்த்து, அரை மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய அரிசியை ஒரு சுத்தமான துணியில் பரப்பி, ஃபேன் காற்றில் காய வைத்து எடுக்கவும். ஒரு வாணலியில் அரிசியைச் சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து ஒரு நிமிடம் வறுக்கவும். வறுத்த அரிசியை மிக்ஸி ஜாரில் சேர்த்து, நைஸான பவுடராக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

Advertisment
Advertisements

அதே வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து, நறுக்கிய முந்திரி மற்றும் துருவிய தேங்காயைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பெரிய தட்டில், பொடித்த தினை மாவு, ஜாக்கெரி பவுடர் மற்றும் வறுத்து வைத்த முந்திரி-தேங்காய்க் கலவையைச் சேர்க்கவும். சிறிதளவு நெய்யைச் சூடு செய்து, சூடாகவே அந்தக் கலவையில் ஊற்றவும். இப்பொழுது இந்தக் கலவையை நன்றாகக் கலந்து, உருண்டையாக லட்டு பிடித்து எடுத்தால் சுவையான மற்றும் சத்தான தினை லட்டு தயார். இந்த ரெசிபியை முயற்சி செய்து பார்த்து, இனி கடைகளில் லட்டு வாங்குவீர்களா இல்லையா என்று சொல்லுங்கள்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Foods with more protein content Foods that helps to boost iron levels

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: