Advertisment

காய்கறி வேண்டாம்: குக்கரில் இன்ஸ்டன்ட் சாம்பார்; இப்படி செய்யுங்க!

Instant Sambar recipe in Pressure Cooker in Tamil: முக்கியமான விஷயம் என்னெவென்றால் இந்த சுவையான சாம்பாருக்கு எந்த காய்கறியும் தேவையில்லை.

author-image
WebDesk
New Update
How to Make Sambar in cooker in Tamil

instant sambar recipe in tamil

தென்னிந்திய உணவுகளில் மிகவும் பிரபலமான உணவாக சாம்பார் உள்ளது. இதன் ஸ்பெஷாலிட்டியே நாம் இவற்றை எந்த உணவுகளுடனும் சேர்த்து ருசிக்கலாம். உதாரணமாக காலை உணவுகளான இட்லி, தோசை, ஆப்பம், வடை ஆகியவற்றுடனும், மதிய உணவுகளான சாதம் வெரைட்டி ரைஸ் போன்றவற்றுடனும் எடுத்துக்கொள்ளலாம்.

Advertisment

இந்த சுவையான சாம்பாரை தயார் செய்ய பல வழிகள் இருந்தாலும் குக்கரில் தயார் செய்வது ரொம்பவே ஈஸியான வழியாகும். இந்த வழியை நம்மில் பலர் முயற்சித்து இருந்தாலும் ஏதோ ஒன்றை குறைவாகவோ அல்லது நிறைவாகவோ சேர்த்து விட்டோம் என்ற எண்ணம் தோன்றும். இது போன்ற சிறு குழப்பம் ஏற்படாத வண்ணம் இருக்கவே இந்த சிம்பிள் செய்முறையை இங்கு வழங்கியுள்ளோம். முக்கியமான விஷயம் என்னெவென்றால் இந்த சுவையான சாம்பாருக்கு எந்த காய்கறியும் தேவையில்லை.

குக்கரில் சாம்பார் தயார் செய்யத்தேவையான பொருட்கள்:

publive-image

துவரம் பருப்பு – 150 கிராம்

சின்ன வெங்காயம் - 100 கிராம்

தக்காளி - 2

பூண்டு - 8

மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

உப்பு

புளி - சிறிய நெல்லி அளவு

கொத்தமல்லி தழை

தாளிக்க…

எண்ணெய் - 2 ஸ்பூன்

கடுகு, உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்

கருவேப்பிலை - சிறிதளவு

சின்ன வெங்காயம் - நீளமாக நறுக்கியது

பெருங்காய தூள் - 1/4 ஸ்பூன்

குக்கரில் இன்ஸ்டன்ட் சாம்பார் செய்முறை:

முதலில் ஒரு குக்கர் எடுத்து அதில் 150 கிராம் துவரம் பருப்பு சேர்த்து நன்கு அலசிக் கொள்ளவும்.

பிறகு அவற்றுடன் தோலை உரித்த சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி, தோலை உரித்த பூண்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு போன்றவற்றை சேர்த்துக்கொள்ளவும்.

தொடர்ந்து சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.

இவையனைத்தையும் நன்கு மிக்ஸ் செய்த பிறகு, குக்கர் மூடியை எடுத்து மூடிக் கொள்ளவும்.

2 விசில் வந்த பிறகு, 5 நிமிடம் சிம்மில் வைத்து, குக்கர் சூடு ஆறிய பிறகு திறக்கவும்.

இதன்பின்னர் சிறிதளவு கொத்தமல்லி தழையை சேர்க்கவும்.

பிறகு தாளிக்க, எண்ணெய் சூடானதும், கடுகு உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்க்கவும்.

தொடர்ந்து சின்ன வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். பிறகு அவற்றுடன் பெருங்காயம் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளவும்.

இப்போது, இந்த தாளிப்பை எடுத்து அதை முன்பு தயார் செய்து வைத்துள்ள சாம்பாருடன் சேர்க்கவும்.

இவையனைத்தையும் நன்றாக மிக்ஸ் செய்து கொண்டால், நீங்கள் எதிர்பார்த்த இன்ஸ்டன்ட் சாம்பார் தயார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Food Recipes Healthy Life Food Tips Healthy Food Tips Healthy Food Tamil News 2 Health Tips Healthy Food Sambar Recipe Sambar Recipe Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment