நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முளைக்கீரை வைத்து ஒரு கீரை மசியல் எப்படி செய்வது என்று வெங்கடேஷ் பட் youtube பக்கத்தில் கூறி இருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
முளைக்கீரை பாசிப்பருப்பு சீரகம் அரிசி குண்டு மிளகாய் துருவிய தேங்காய் நெய் கருவேப்பிலை தக்காளி மஞ்சள் தூள் உப்பு
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், அரிசி, குண்டு மிளகாய், துருவிய தேங்காய் இவை அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பொடியாக அரைக்கவும். பின்னர் ஒரு கடாய் வைத்து நெய் ஊற்றி அது காய்ந்ததும் மிளகாய், சீரகம், கருவேப்பிலை போட்டு வதக்கவும்.
பின்னர் தோல் நீக்கிய தக்காளியை போட்டு மசிக்கவும். அடுத்ததாக மஞ்சள் தூள் சேர்த்து நறுக்கிய கீரையையும் போட்டு நன்கு வதக்க வேண்டும். இதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கீரை வெந்து தண்ணீர் விட ஆரம்பிக்கும் போது அரைத்து வைத்த பேஸ்ட் சேர்த்து கலந்து இரண்டு நிமிடம் வேக விடவும்.
பின்னர் இதில் நெய் சேர்த்து கிளற வேண்டும். அவ்வப்போது நெய் சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் இதில் வேகவைத்து வைத்துள்ள பாசிப்பருப்பையும் சேர்த்து நன்கு மசித்து கொள்ளவும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு அதில் நெய் ஊற்றி சாப்பிட ஆரம்பிக்கலாம்.