Advertisment

கொழுப்பை அதிகரிக்குமா கீட்டோ டயட்? சுகர் பேஷன்ட்களுக்கு இது நல்லதா?

இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்கள், டைப் 1 டயபட்டிஸ் இருப்பவர்கள், கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த டயட்டை பின்பற்றக்கூடாது.

author-image
WebDesk
New Update
கொழுப்பை அதிகரிக்குமா கீட்டோ டயட்? சுகர் பேஷன்ட்களுக்கு இது நல்லதா?

சர்க்கரை நோயாளிகள் நிச்சயம் உடல் எடை குறைவது அவசியமாகிறது. இந்நிலையில் தற்போது பிரபலமாக உள்ள கீட்டோ டயட் இதற்கு சரிவருமா என்ற கேள்வி எழுவது இயல்புதான்.

Advertisment

இந்நிலையில் இது தொடர்பாக மருத்துவர் அனூப் மிஸ்ரா  கூறுகையில், என்னிடம் 23 வயதான 92 கிலோ எடையில் உள்ள பெண் பேசினார். அவர் கீட்டோ டயட் மூலம் 2 மாதங்களில் 4 கிலோ குறைத்திருக்கிறார். ஆனால் அவருக்கு கடும் உடல் சோர்வு, காய்ச்சல், உடல் வலி மற்றும் மூச்சு விடும்போது துர்நாற்றம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது.

கீட்டோ டயட் என்றால் என்ன?

கீட்டோ டயட் என்பது அட்கின் (Atkins) டயட்ஸ் மூலம் தான் தொடங்குகிறது. டாக்டர் அட்கின் நியூ டயட் ரவலூஷன் (Dr Atkins New Diet Revolution: The High Calorie Way to Stay Thin Forever) என்ற புத்தகம் மிக பிரபலமான புத்தகம். இந்த புத்தகத்தின் மூலமாகத்தான் கீட்டோ டயட் அதிக பிரபலமானது. குறிப்பாக மேற்கு உலகத்தில் உள்ள அசைவ பிரியர்களுக்கு இந்த டயட் வசதியாக இருக்கிறது. இதில் நீங்கள் அவித்த மாமிசம், முட்டை, சீஸ் ஆகியவற்றை சேர்த்து கொள்ளலாம். இந்நிலையில் குறிப்பாக குறைந்த அளவில் கார்போஹைட்ரேட் எடுத்துகொள்ள வேண்டும். ஒரு ரெட்டி அல்லது அரை ரொட்டிதான் முதலில் எடுத்துகொள்ள வேண்டும்.

இந்த டயட்டில் அதிக உடல் எடை குறையும். சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. மேலும் இன்சுலின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. மேலும் பிசிஓஎஸ் குறைபாடு உள்ளவர்களுக்கு இது நல்ல பலன் அளிக்கிறது.

ஆனால் மிருகங்கள் இடத்தில் இதை சோதித்து பார்க்கும்போது, கல்லீரலில் அதிக கொழுப்பு சேர்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த கண்டுபிடிப்புகளுக்கு, எந்த உறுதியான ஆதாரங்களும் இல்லை.

யாரெல்லாம் கீட்டோ டயட்டை பின்பற்றக்கூடாது ?

இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்கள், டைப் 1 டயபட்டிஸ் இருப்பவர்கள், கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த டயட்டை பின்பற்றக்கூடாது. மேலும் தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துகொள்பவர்கள் இந்த டயட்டை பின்பற்ற வேண்டாம்.

குறைந்த நாட்களில் எடை குறைப்பது சரியா?

பல்வேறு குறைபாடு மற்றும் நோய்கள் உள்ளவர்கள் தவிற இளமையாக இருக்கும் நபர்கள் இதை பின்பற்றலாம். ஆனால் அவர்களும் ஒரு நல்ல டயட்டீஷியன் பரிந்துரைத்த பிறகு மட்டுமே இதை கடைபிடிக்க வேண்டும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment