Advertisment

இன்சுலின் உற்பத்தி... காலையில் ஒரு கிளாஸ் சீரகம் தண்ணீர் குடிச்சா இவ்ளோ நன்மை இருக்கு!

தினமும் காலையில் சீரகம் தண்ணீர் குடித்து வர அது உடலில் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுகிறது என நிபுணர் திக்ஷா தயாள் கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cumin seeds benefits in tamil; why should start your day with a glass of cumin seeds

தினமும் காலையில் சீரகம் தண்ணீர் குடிப்பது பல நன்மைகள் தருவதாக ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். சீரகம் தண்ணீர் எளிதாக வீட்டிலேயே செய்யக் கூடியது. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது. அதேபோன்று சீரகம் தண்ணீர் தொப்பை குறைக்க உதவுமான என பலர் இணையதளத்தில் தேடிபார்த்துள்ளனர். இதுகுறித்து நிபுணர்கள் இங்கு விளக்கமளித்துள்ளனர்.

Advertisment

சீரகம் தண்ணீர் குறிப்பாக தொப்பையை (Belly fat) குறைக்க உதவாது. இருப்பினும் அது வளர்ச்சிதை மாற்றத்தை (Metabolism) மேம்படுத்தி உடலின் ஒட்டுமொத்த கொழுப்பைக் குறைக்க உதவுகிறது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

குர்கானில் உள்ள சானார் இன்டர்நேஷனல் மருத்துவமனையின் ஊட்டச்சத்து மற்றும் உணவுத் துறை தலைவர் திக்ஷா தயாள் கூறுகையில், "சீரகம் தண்ணீர் கொழுப்பை குறைக்க உதவுகிறது. சீரகம் தண்ணீர் நன்மைகள் பல உள்ளன. சீரகம் தண்ணீர் குடிப்பது செரிமானப் பண்புகளுடன் தொடர்புடையது. இது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

காலையில் ஒரு கிளாஸ் சீரகம் தண்ணீர் குடிப்பது கார்போஹைட்ரேட், குளுக்கோஸ் மற்றும் கொழுப்புகளை உடைக்க உதவும் என்சைம்களின் உற்பத்தியை தூண்டுகிறது. செரிமானப் பண்புகளுடன் தொடர்புடையது. அஜீரண கோளாறை தடுக்கிறது.

சீரகத்தில் உள்ள தைமோகுவினோன் கல்லீரலை பாதுகாக்கிறது. இது பான்கிரியாசை தூண்டி என்சைம்ஸ் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. செரிமானத்தை ஊக்குவிக்கிறது. நல்ல செரிமானம் வயிற்று கொழுப்பை குறைக்க உதவும் " என்று தயாள் கூறுகிறார்.

மேலும் கூறுகையில், "சீரகம் தண்ணீர் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. உடல் எடையை அதிகரிக்கிறது. தினமும் காலையில் சீரகம் தண்ணீர் குடித்து வர அது உடலில் இன்சுலின் உற்பத்தியை தூண்டுகிறது மற்றும் கிளைகோசைலேட்டட் ஹீமோகுளோபின் அளவைக் குறைக்கிறது.

இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. ஆக்ஸிஜன் கொண்டு செல்வதற்கும், ஹீமோகுளோபின் உற்பத்திக்கும் சிறந்தது" என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment