சென்னை காசிமேட்டில் மிகவும் பிரபலமாகவும் எல்லா கடைகளிலும் கிடைக்கக்கூடிய அட்டலாப்பம் எப்படி செய்வது என்று சூப்பர் கிச்சன் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். இந்த அட்டலாப்பம் மிகவும் டேஸ்டாகவும் சாப்டாகவும் இருக்கும். குழந்தைகள் கூட இதை தாராளமாக சாப்பிடலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்
பச்சரிசி வெல்லம் ரவை கடலைப்பருப்பு ஏலக்காய் பொடி ஆப்பசோடா உப்பு கல் உப்பு முட்டை எண்ணெய் தேங்காய் துண்டுகள் முந்திரி திராட்சை
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு அளவு கப் எடுத்துக்கொண்டு அதில் பச்சரிசி எடுத்து கழுவி ஊற வைக்கவும். அரிசி அளந்த கப்பில் முக்கால் கப் அளவிற்கு நாட்டுச் சர்க்கரை அல்லது பொடித்த வெல்லம் சேர்க்கவும். இந்த வெள்ளத்தை ஒரு பேனில் போட்டு தண்ணீர் சிறிது சேர்த்து கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரிசியில் உள்ள தண்ணீரை வடித்து மிக்ஸியில் சேர்த்து அதில் இந்த வெள்ளை தண்ணீரையும் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதில் மூன்று டேபிள் ஸ்பூன் ரவை, ஊற வைத்த கடலைப்பருப்பு, ஏலக்காய் பொடி, ஆப்ப சோடா, உப்பு ஆகியவற்றை சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் அடி கனமான பாத்திரம் ஒன்று வைத்து அதில் கல் உப்பு சேர்த்து மிதமாக சூடாக்கவும். பின்னர் ஒரு கப்பில் ஒரு மூன்று முட்டை சேர்த்து உடைத்துக் கொள்ளவும். மற்றொரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.
அதில் இந்த மாவை ஊற்றி மேலே முட்டையை சேர்த்து பரப்பி விட்டு தேங்காய் துண்டுகள், முந்திரி, உலர் திராட்சைகளையும் சேர்த்து உப்பின் மீது வைத்து மூடி விடவும். நன்கு 20 நிமிடம் வேக விட்டு எடுத்து சாப்பிடலாம்.