காலையில் செய்யுற சாம்பார் நைட்டு வர ரொம்பவே ஃப்ரெஷ்: இந்த ஒரு பொருள் சேர்த்தால் போதும்!
குக்கரில் சாம்பார் வைக்கும் போது தண்ணீர் கூடுதலாக சேர்த்து விட்டால் அவை பொங்கி வெளியே வரும். அதனை தடுக்க, சிறிய வெறும் கிண்ணத்தை காய்கறி வேக வைக்க குக்கரை மூடும் போது வைத்துவிடவும்.
சமையல் என்பது ஒரு கலை என்றே சொல்லலாம். மற்ற கலைகளை போலவே, இந்தக் கலையையும் நாம் கற்றுக் தெரிந்தவர்களிடம் இருந்தும், அனுபவசாளிகளிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். தற்போது டிஜிட்டல் மயம் ஆன நிலையில், சமையலை வகுப்புச் சென்று கற்றுக் கொள்ள தேவையில்லை.
Advertisment
இப்போது சமையல் குறிப்புகள் நம் கையடக்கத்தில் இருக்கிறது. ஒரு காலத்தில் செய்தித் தாள்களிலும், வார இதழ்களிலும் வரும். தற்போது இணைய பக்கம் வாயிலாகவும், யூடியூப் சேனல்கள் வழியாகவும் நம்மை வந்தடைகிறது. அந்த வகையில், சமையலில் அனுபவம் படைத்தவர்கள் சொல்லித் தந்த சில கிட்சன் டிப்ஸ்களை இங்கு நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றை இங்குப் பார்க்கலாம்.
முதல் குறிப்பாக, நாம் காலையில் வைக்கும் சாம்பார் மாலைக்குள் கெட்டுப் போய் விடுகிறது. அவை கெடாமல் இருக்க, அவற்றுடன் வெந்தயம் சேர்த்துக் கொள்ளவும். இந்த வெந்தயத்தை பருப்பு வேக வைக்கும் போதோ அல்லது வெங்காயம் தாளிக்கும் போது சேர்த்துக் கொள்ளலாம்.
குக்கரில் சாம்பார் வைக்கும் போது தண்ணீர் கூடுதலாக சேர்த்து விட்டால் அவை பொங்கி வெளியே வரும். அதனை தடுக்க, சிறிய வெறும் கிண்ணத்தை காய்கறி வேக வைக்க குக்கரை மூடும் போது வைத்துவிடவும். தண்ணீர் அதிகம் இருந்தால் அந்த கிண்ணத்தில் தங்கி விடும். விசில் மூலம் வெளியேறாது.
Advertisment
Advertisement
பெண்கள் தங்கள் கையில் இருக்கும் வளையல்களை கழற்ற முடியவில்லை என்றால், ஒரு பிளாஸ்டிக் கவர் எடுத்து அதனை வளையல் வழியாக கைக்குள் விட்டு, பிறகு வளையல் மேல் விட்டு வெளியே இழுத்தல் சுலபமாக வந்து விடும்.
எண்ணெய் படிந்த தலையணை உறை அல்லது ஆடைகளில் இருக்கும் கறையைப் போக்க, மிதமான சுடுதண்ணீர் ஒரு வாளியில் எடுத்து, அதில் 3 ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் சோடா சேர்த்து விடவும். அத்துடன் ஷாம்பூ சேர்த்து விடவும். நுரை வரும் வரை கையால் கலந்து விட்ட பிறகு, துணியை அதில் போட்டு ஊற வைக்கவும். பின்னர் எடுத்து கைகளால் பிழிந்தால் அழுக்கு இருக்காது. அப்படி மேலும் இருந்தால், அதனை சோப் போட்டு ஒருமுறை துவைத்துக் கொள்ளலாம்.