வேர்க்கடலையில் நார்ச்சத்து, புரதம், கார்போஹட்ரேட், கொழுப்பு சத்து, கால்சியம், காப்பர், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், மெக்னீசியம், துத்தநாகச் சத்து, பாஸ்பரஸ், தண்ணீர் சத்து ஆகியவை நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை
வெல்லம்
நெய்
செய்முறை
ஒரு பெரிய பாத்திரத்தில் 2 கப் வேர்க்கடலையைச் சேர்த்து மிதமான தீயில் நன்கு வறுக்க வேண்டும். பின்னர் அதனை ஒன்றுக்கு இரண்டாக உடைத்தது கொரகொரப்பாக அரைக்க வேண்டும். தேவைப்பட்டால் வேர்க்கடலை தோலை உறித்துக் கொள்ளலாம்.
ஒரு பாத்திரத்தில் கப் வெல்லம் எடுத்து, 4 டீஸ்பூன் தண்ணீரில் சேர்த்து, வெல்லம் உருகும் வரை நன்கு கிளற வேண்டும். கெட்டியாக வெல்லப்பாகு கிடைக்கும். வெல்லம் பாகு தயார் ஆனதும் வேர்க்கடலை மீது பாகை ஊற்றி நன்கு கிளற வேண்டும்.
ஒரு தட்டில் நெய் அல்லது எண்ணெய் தடவி அதில் வெல்லப்பாகு ஊற்றிய வேர்க்கடலையைச் சமமாக பரப்ப கிளற்வும்.
அதை நன்கு பரப்பி ஒவ்வொரு துண்டுகளாக மிட்டாய் போல் வெட்டி ஆற வைத்து உடைத்து காற்று புகாத டப்பாவுக்குள் போட்டு வைத்துக் கொண்டால் ஒரு மாதம் வரை நமத்துப் போகாமல் மொறு மொறுப்பாக இருக்கும்.
கோவில்பட்டி கடலை மிட்டாய் | Kadalai Mittai Recipe In Tamil | peanut Burfi | Peanut Chikki.
இதை சாப்பிடுவதன் மூலம் குழந்தைகளின் உடல் எடையும் கூடும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். கடையில் வாங்கும் மிட்டாய்களுக்கு பதிலாக இதை சாப்பிட கொடுக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“