வீட்டில் சப்பாத்தி மற்றும் பருப்பை என்ன செய்வது என்று தெரியாமல் நீங்கள் இருக்கலாம். இந்நிலையில் அதை சூப்பாக மாற்ற முடியும்.
தேவையான பொருட்கள்
2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
பூண்டு
தக்காளி
உப்பு மற்றும் மிளகு இடித்தது
1 கப் பருப்பு
சப்பாத்தி
க்ரீம்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். பூண்டு, தக்காளி, உப்பு, பேப்பர் சேர்த்து வதக்க வேண்டும். இப்போது மிச்சமான பருப்பை அத்துடன் சேர்த்துக்கொள்ளவும். சிறிது நேரம் கழித்து, இதை தனியாக எடுத்து வைக்கவும். இந்நிலையில் தனி பாத்திரத்தில் எண்ணெய் எடுத்துகொண்டு சப்பாத்தியை பிச்சிப்போட்டு வறுக்க வேண்டும். தொடர்ந்து ஏற்கனவே உள்ள கலவையில் சேர்த்து, அத்துடன் க்ரீமை கலக்க வேண்டும். சுவையான சூப் ரெடி