Advertisment

காலையில் ஒரு கிளாஸ் லெமன் வாட்டர்… இப்படி குடிச்சா சுகர் போயே போச்சு!

உடலின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. காலையில் ஒரு கிளாஸ் லெமன் வாட்டர் குடித்துப் பாருங்கள். உங்களுடைய சுகர் போயே போச்சு என்பதை உணர்வீர்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காலையில் லெமன் ஜூஸ்: சுகர் உயர்வை எப்படி தடுக்கும் தெரியுமா?

வாழ்க்கைமுறையும் உணவு முறையும் மாற்றிவிட்டதால், இன்றைக்கு பலருக்கும் சர்க்கரை நோய் பொதுவான ஒன்றாகக் காணப்படுகிறது. உடலில் சர்க்கரை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் பலரும் உணவுகளைப் பார்த்துப் பார்த்து உட்கொள்கிறார்கள். ஏனென்றால், இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் உணவு முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக லெமன் வாட்டர் உங்களுக்கு ஒரு கூடுதல் சிறப்பான பாணமாக இருக்கும்.

Advertisment

வெயில் தகிக்கும் நாட்களில் உங்கள் தாகத்தைத் தணிப்பதற்கு சிறந்த பாணமாக இருக்கும். தாகம் தனிப்பதோடு மட்டுமில்லாமல், அது ஒரு அதிசய மருந்தாகவும் இருக்கிறது. அதிக்ம் ஹேங்ஓவர் ஆனால், கட்டாயம் இந்த பாணத்தைக் குடிக்கலாம். அப்படி என்ன பாணம் என்பது உங்களுக்கு எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

நீங்கள் நினைப்பது சரிதான். ஆமாம், ஒரு கிளாஸ் லெமன் வாட்டர் போதும், புத்துணர்ச்சியூட்டும் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். மென் குளிர் பானங்களுக்கு பதிலாக குறைந்த கலோரி சுவையான மாற்றாக இந்த லெமன் வாட்டர் இருக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு எலுமிச்சை தண்ணீர் குடிக்க நிபுணர்கள் பரிந்துரைக்கும் முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.

நீரிழிவு நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதன் மூலம் வகைப்படுத்தப்படும் ஒரு நிலை. நீரிழிவு நோய் தற்போது உலகளவில் 425 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. இந்த நிலைமையை மாற்றுவது எளிதல்ல. சரியான கவனிப்பு, மருந்துகள் மற்றும் தாமதமான நோயறிதல் ஆகியவை நீரிழிவு நோயை நிர்வகிப்பதை இன்னும் கடினமாக்குகிறது.

உங்களுடைய இரத்தத்தில் சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் உங்கள் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைத் தவிர்த்து, நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம் உள்ள உணவுகள் மற்றும் பானங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிளாஸ் லெமன் வாட்டர் உங்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் உணவில் ஒரு சிறந்த கூடுதல் பாணமாக இருக்கும்.

publive-image

நீரிழிவு நோயாளிகள் ஏன் லெமன் வாட்டர் குடிக்க வேண்டும்?

எலுமிச்சை தண்ணீர் உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை நேரடியாக பாதிக்காது. சர்க்கரை அளவு குறைய காரணமாக இருக்கும். சர்க்கரை அளவு உச்சத்திற்கு செல்லாமல் தடுக்க உதவும்.

எளிதாக தயாரிக்கக்கூடிய பானத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கலோரிகள் மிகக் குறைவாக உள்ளது. லெமன் வாட்டர் நீர்ச் சத்துடன் இருக்க உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் அவசியமானது.

நீரிழிவு நோயாளிகள் நீரிழப்பு அபாயத்தில் உள்ளனர். ஏனெனில், சாதாரண இரத்த குளுக்கோஸ் உங்கள் உடலில் உள்ள திரவங்களை குறைக்கிறது. எலுமிச்சையில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அவை எளிதில் சர்க்கரை வெளியேறாமலும், இரத்த ஓட்டத்தில் சர்க்கரைகள் மெதுவாக வெளியேறுவதை உறுதி செய்கிறது. கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி, இரத்த அழுத்தத்தை சீராக்குவதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

எலுமிச்சையில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. அமெரிக்க நீரிழிவு சங்கம் எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் பழங்களை "நீரிழிவு சூப்பர்ஃபுட்" என்று அழைக்கிறது. எலுமிச்சையில் நார்ச்சத்து, வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளன. இது ஆரோக்கியமான நீரிழிவு உணவுக்கு பயனளிக்கும். 'அட்வான்ஸ் இன் நியூட்ரிஷன்' இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், எலுமிச்சை மற்றும் பிற சிட்ரஸ் பழங்களில் காணப்படும் நரிங்கினென் என்ற இரசாயன கலவை, நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது.

எலுமிச்சை சாற்றை பிழிந்து, தண்ணீருடன் குடிப்பது உங்களுடைய தினசரி நார்ச்சத்து அல்லது வைட்டமின் சி-க்கு சமமாக இருக்காது. ஆனால், குறைவான கலோரிகள் மற்றும் சர்க்கரையால் நிரப்பப்பட்ட, சந்தைகளில் கிடைக்கும் சோடாக்களை விட இது இன்னும் சிறந்த பந்தயம். நீங்கள் வீட்டில் தயாரிக்கும் போது எலுமிச்சை தண்ணீரில் சர்க்கரை சேர்க்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். லெமன் வாட்டரை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.

பொறுப்பு துறப்பு: இங்கே பொதுவான தகவல் மட்டுமே வழங்கப்படுகிறது. மருத்துவர் மற்றும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று அருந்துங்கள். இந்தத் தகவலுக்கு தகவலுக்கு தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் பொறுப்பில்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Healthy Life Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment