Advertisment

மாங்கொட்டையில் இவ்வளவு நன்மைகளா? குழம்பு வைத்து சாப்பிடுங்க.. ரெசிபி இதோ!

மாங்காயின் மாம்பருப்பு புரதம், நார்ச்சத்து, கால்சியம் என பலவிதமான சத்துகளை உள்ளடக்கியிருக்கிறது. மாங்கொட்டையில் மிளகு குழம்பு செய்வது குறித்து பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மாங்கொட்டையில் இவ்வளவு நன்மைகளா? குழம்பு வைத்து சாப்பிடுங்க.. ரெசிபி இதோ!

மாங்காய் பலரும் விரும்பி சாப்பிடுவோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடுவோம். சாப்பிட்ட பின் அதிலுள்ள மாம்பருப்பை வீசிவிடுவோம். ஆனால் மாம்பழம் போலவே மாம்பருப்பிலும் அதிக நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மாம்பருப்பு புரதம், நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகள் இருப்பதாக கூறுகின்றனர். மாங்கொட்டையில் மிளகு குழம்பு செய்வது குறித்து இங்கு பார்க்கலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்

மாங்கொட்டை - 1

மாங்காய் துண்டுகள் - 12

புளி - சிறிதளவு

வெல்லம் - 1/4

மஞ்சள் தூள் - சிறிதளவு

கடுகு - 1/4 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

துவரம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் வற்றல் - 10

உளுத்தம் பருப்பு

மிளகு - 1 டேபிள் ஸ்பூன்

பெருங்காயத்தூள் - சிறிதளவு

எண்ணெய்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் புளி, வெல்லத்தை தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி மஞ்சள் தூள் சேர்க்கவும். துவரம்பருப்பு, மிளகாய் வற்றல் , மிளகு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அடுத்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து புளி மற்றும் வெல்ல கரைசலை ஊற்றவும். அது கொதி வந்தவுடன் ஊறிய மாங்காய் துண்டுகளை சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் மிக்ஸியில் அரைத்த பொருட்களை சேர்த்து கிளறவும். இதன் பின் எண்ணெய் பிரிந்த வரும் அந்த பதத்தில் இறக்கி கறிவேப்பிலை சேர்க்கவும். அவ்வளவு தான் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். வயிறு மந்தமாக இருக்கும்போது சாப்பிட்டால் பசி எடுக்கும்.

முன்னதாக, மாங்கொட்டை, துண்டுகளை வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைத்து எடுத்து சேர்க்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment