Advertisment

இதுதான் ஹெல்த்தி... குக்கரில் சாதம் வடிக்கும் முறை தெரிஞ்சுக்கோங்க!

பொதுவாக குக்கர் சாதம் உடலுக்கு நல்லதல்ல என்ற கருத்து கூறப்படுகிறது. இதனால் சாதம் வடித்து சாப்பிட வேண்டும். ஆனால் சாதரண பாத்திரத்தில் சாதம் வடிக்க இங்கே பலருக்கு தெரியாது. இந்நிலையில் குக்கரிலேயே சாதம் வடிக்கும் முறைகள் உள்ளன. தற்போது குக்கரில் எப்படி சாதம் வடிப்பது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இதுதான் ஹெல்த்தி... குக்கரில் சாதம் வடிக்கும் முறை தெரிஞ்சுக்கோங்க!

பொதுவாக குக்கர் சாதம் உடலுக்கு நல்லதல்ல என்ற கருத்து கூறப்படுகிறது. இதனால் சாதம் வடித்து சாப்பிட வேண்டும். ஆனால் சாதரண பாத்திரத்தில் சாதம் வடிக்க இங்கே பலருக்கு தெரியாது. இந்நிலையில் குக்கரிலேயே சாதம் வடிக்கும் முறைகள் உள்ளன. தற்போது குக்கரில் எப்படி சாதம் வடிப்பது என்பதை தெரிந்துகொள்ளலாம்.



எவ்வளவு அரிசி எடுத்துக்கொள்ள உள்ளீர்களோ அதற்கு தகுந்த பாத்திரத்தை எடுத்துகொள்ள வேண்டும். மேலும் அந்த பாத்திரம் குக்கருக்குள் பொருந்தும்படியாக இருக்க வேண்டும். குக்கரை முழுவதுமாக ஆட்கொள்ளும் பாத்திரத்தை பயன்படுத்த வேண்டாம். ஒரு டம்ளர் அரிசியை எத்துக்கொள்ள வேண்டும். அதற்கு 2 டம்ளர் தண்ணீரை சேர்த்துக்கொண்டும்.  10 நிம்மிடங்கள் வரை ஊரவைக்கவும். கூடுதலாக 1 ½ டம்ளர் தண்ணீரை  அரிசி ஊரிய பிறகு சேத்துகொள்ள வேண்டும். இப்போது உப்பு தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளவும். வேண்டாம் என்றால் விட்டுவிடவும்.

Advertisment
publive-image

அடுப்பை ஆன் செய்த பிறகு குக்கரின் அடிபாகத்தில் 1 ½ டம்ளர் தண்ணீர் சேர்க்கவும். அரிசி இருக்கும் பாத்திரத்தை குக்கரின் நடுவில் வைக்கவும். அரிசி இருக்கும் பாத்திரத்தை  வேண்டுமானால் அதற்கு பொருந்தும் மூடியால் முடலாம். மூட வேண்டம் என்று நினைத்தால் அப்படியே விட்டுவிடவும். நீங்கள் வழக்கமாக எவ்வளவு விசில் விட்டு குக்கரை அணைப்பீர்களோ அவ்வளவு விசில் வரும் வரை காத்திருக்கவும். ஆவி நீங்கிய பிறகு குக்கரை திறந்து பார்த்தால் சாதம் வெந்திருக்கும்.

இப்போது பாத்திரத்தை வெளியே எடுக்க வேண்டும். தற்போது பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை வடிக்க வேண்டும். பாத்திரத்தைவிட பெரிய மூடியை பயன்படுத்து அந்த பாத்திரத்தை மூடிக்கொள்ளவும் அதன் பிறகு பாத்திரத்தை சாய்த்து  சாதத்தை வடிக்க வேண்டும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment