இந்த குளிருக்கு சுவையாகவும், நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வாரத்திற்கு ஒரு நாள் மட்டன் ரசம் வைத்துவிடுங்கள். இதன் ரெசிபி இதோ.
தேவையான பொருட்கள்
ஆட்டு எலும்பு – 250 கிராம்
எலுமிச்சை – 1
பூண்டு – 4
இஞ்சி அரைத்தது- 1 ஸ்பூன்
சீரகத்தூள்- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
சிவப்பு மிளகாய்
வெங்காயம்
நல்லெண்ணை
கறிவேப்பிலை
கொத்தமல்லி
செய்முறை
எலும்பு துண்டுகளை நன்றாக குக்கரில் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். தற்போது அதில் மஞ்சள் தூள், இஞ்சி அரைத்தது, கொத்தமல்லி, உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். 3 விசில் வரும் வரை பார்த்துவிட்டு, தொடர்ந்து 10 நிமிடம் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.

இந்நிலையில் கடாயை அடுப்பில் வைத்து அதில் பூண்டு, எண்ணெய், மிளகுத் தூள், சீரகத்தூள், பூண்டுப்பல், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். தற்போது வேக வைத்த எலும்பு கலவையை சேர்க்கவும். அத்துடன் எலுமிச்சை சாறை பிழிந்துவிட்டு பரிமாறலாம்.