அரைச்சு விட்ட சுவையான நாட்டுக் கோழி முட்டை குழம்பு செய்வது குறித்து பார்ப்போம்.
முட்டை - 5
வரமிளகாய்
சோம்பு, சீரகம், மிளகு
பெரிய வெங்காயம்
தக்காளி
பொதினா
கொத்தமல்லி
எண்ணெய்
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி 2 பட்டை, 3 லவங்கம் சேர்த்து அரை தேக்கரண்டி சோம்பு, சீரகம், மிளகு சேர்த்த பின் 5 வரமிளகாய், அரை தேக்கரண்டி கொத்த மல்லி சேர்த்து வதக்கவும்.
அடுத்து 300 கிராம் பெரிய வெங்காயம், உப்பு சேர்க்கவும். இடையில் வேக வைத்த முட்டையை தோல் நீக்கி வைக்கவும். வெங்காயம் வெந்ததும் 200 கிராம் தக்காளி, பொதினா சேர்க்கவும். இப்போது இந்த கலவையை தனியாக எடுத்து வைக்கவும்.
கடாயில் மீண்டும் எண்ணெய் ஊற்றி வேக வைத்த முட்டையை போடவும். மஞ்சள், உப்பு சேர்த்து பொறிக்கவும். தனியாக எடுத்து வைக்கவும். இப்போது முன்பு வதக்கி வைத்த கலவையை அம்மியில் வைத்து அரைத்து எடுக்கவும். இப்போது மீண்டும் கடாயில் எண்ணெய், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி அரைத்து வைத்த மசாலா, தண்ணீர் சேர்த்து கிளறி முட்டை சேர்க்கவும். அவ்வளவு தான் சுவையான நாட்டுக் கோழி முட்டை குழம்பு ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“