ஆப்பிள் பழத்தை தினமும் ஒன்று எடுத்துக்கொண்டால், மருத்துவரை சந்திக்கும் நிலை ஏற்படாது என்று ஒரு ஆங்கில பழம் மொழி உண்டு. இந்நிலையில் இதில் அதிக உண்மைகள் உள்ளது. ஆப்பிள் பழத்தில் பல்வேறு மருத்துவ குணங்களும் உள்ளது. உடல் எடை இழக்கவும், நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. இதயம், மூளை, நுரையீரல் உள்ளிட்டவற்றின் ஆரோக்கியத்தை காப்பாற்ற உதவுகிறது.
ஆப்பிள் குறைந்த கலோரிகள் உள்ளது. குறைந்த கொழுப்பு சத்து உள்ளது, நார்சத்து அதிகம். இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை எந்த தயக்கமும் இல்லாமல் எடுத்துக்கொள்ளலாம். இதில் உள்ள பாலிபினால்ஸ், ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும் ஸ்டோக் வராமல் தடுக்கிறது.
ஒரு பாதி அளவு ஆப்பிள் அல்லது 182 கிராம் ஆப்பிளில் இருக்கும் சத்துக்கள் ?
கலோரிகள் : 95, கார்போஹைட்ரேட்: 25 கிராம், நார்சத்து : 4 கிராம், சர்க்கரை – 19 கிராம், கொழுப்பு சத்து- 0 , புரத சத்து : 0, வைட்டமின் சி- 14 % ( ஒரு நாளுக்கு தேவையான அளவில்) , பொட்டாஷியம் – 6 %
ஆப்பிள் பழத்தில் வைட்டமின்ஸ், மினரஸ், ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. மேலும் வைட்டமின் சி -யும் இருப்பதால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு இது நல்லது.
இதய ஆரோக்கியம்: நார்சத்து, ஆண்டி ஆக்ஸிடண்ட், பிளாப்போனாய்ட்ஸ் மற்றும் ஃபாபோநாய்ட்ஸ், கொலஸ்ட்ராலை குறைத்து, ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. இதனால் இதய நோய் வரும் சத்தியம் குறைகிறது.
இதில் இருக்கும் நார்சத்து, ஜீரணத்தை ஊக்குவிக்கிறது. இதனால் மலசிக்கல் ஏற்படாது. இதுபோல ஆண்டி ஆக்ஸிடண்டான ஃபாபோநாய்ட்ஸ் மற்றும் பாலிபினால்ஸ் வீக்கத்தை குறைக்கிறது.
ஆப்பிளில் இருக்கும் தண்ணீர் சத்து, வரட்சியை ஏற்படுத்தாமல் குறைக்கிறது. மேலும் இதில் இருக்கும் நார்சத்து மற்றும் வைட்டமின் சி அதிகம் சாப்பிட்டது போல உணர்வை ஏற்படுத்துவதால், உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.
சுகர் நோயாளிகள் இதை கண்டிப்பாக சாப்பிடலாம். இயற்கையான முறையில் உள்ள சர்க்கரை, உடலுக்கு தீங்கு ஏற்படுத்தாது. மேலும் இதில் இருக்கும் நார்சத்து, ஜீரணத்தை மெதுவாக்கும். இதனால் ரத்த சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிக்காது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil