15 நிமிடத்தில் ரெடி... இன்ஸ்டன்ட் ஓட்ஸ் தோசை இப்படி தயார் பண்ணுங்க!
குறிப்பாக திங்கள் கிழமை காலையில் என்ன சமைப்பது என்பதை நாம் யோசித்தே நேரத்தை வீணாடிப்போம். இந்த கவலையை போக்க எளிதான உணவை சமைப்பதுதான் நல்ல ஐடியா. இன்ஸ்டண்டாக செய்யும் உணவு மிகவும் பொருத்தமாக இருக்கும். வழக்கமான தோசையல்லாமல் இன்ஸ்டண்ட் ஓட்ஸ் தோசை செய்யலாம். இதற்கு அதிக மெனக்கெடல் தேவையில்லை. வாங்க இன்ஸ்டன்ட் ஓட்ஸ் தோசை எப்படி செய்யலாம்னு பார்ப்போம்.
நாம் வார நாட்களை படு பிசியாக செலவிட வேண்டியிருக்கிறது, குறிப்பாக வார இறுதி நாட்களில் ஓய்வெடுதுவிட்டு, திங்கள் கிழமை காலை என்றாலே ஒரு வித சலிப்பும், இயலாமலையும் வந்து சேரும். குறிப்பாக திங்கள் கிழமை காலையில் என்ன சமைப்பது என்பதை நாம் யோசித்தே நேரத்தை வீணாடிப்போம். இந்த கவலையை போக்க எளிதான உணவை சமைப்பதுதான் நல்ல ஐடியா. இன்ஸ்டண்டாக செய்யும் உணவு மிகவும் பொருத்தமாக இருக்கும். வழக்கமான தோசையல்லாமல் இன்ஸ்டண்ட் ஓட்ஸ் தோசை செய்யலாம். இதற்கு அதிக மெனக்கெடல் தேவையில்லை. வாங்க இன்ஸ்டன்ட் ஓட்ஸ் தோசை எப்படி செய்யலாம்னு பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் – ஒரு கப்
வெங்காயம் – ¼ கப்
ஆட்டா மாவு – ½ டேபிள் ஸ்பூன்
ரவை – 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – நறுக்கியது
பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப
தயிர்- 1 டேபிள் ஸ்பூன்
கருவேப்பில்லை – ஒரு கொத்து
உப்பு – தேவைக்கேற்ப
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
வெந்தயம் -1/2 டேபிள் ஸ்பூன்
பெப்பர் பவுடர்- ½ டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஓரு பவுலில் ஓட்ஸ் மற்றும் வெந்தயத்தை எடுத்துகொள்ளவும். இதை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துகொள்ளவும். தற்போது இதில் ரவை, ஆட்டா மாவு, தயிர், உப்பு, பெப்பர் தூள், பெருங்காயம், இஞ்சி, ஆகியவற்றை தண்ணீர் ஊற்றி கலக்கவும். தோசை மாவு பதம் வரும் வரை தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். இதைத்தொடர்ந்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் , கருவேப்பில்லை ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். 15 நிமிடங்கள் கழித்து, தோசைக் கல்லை சூடேற்றி மாவை ஊற்றி தோசை சுடவும்.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news