Advertisment

3 பொருட்கள் போதும்.. டக்குனு செய்யலாம் ஈவ்னிங் ஸ்நாக்ஸ்; ரெசிபி இதோ!

டீ கடை ஸ்டைல் வெங்காய போண்டா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
3 பொருட்கள் போதும்.. டக்குனு செய்யலாம் ஈவ்னிங் ஸ்நாக்ஸ்; ரெசிபி இதோ!

பள்ளி, அலுவலகம் முடிந்து வந்ததும் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்புவோம். பெரும்பாலான நேரங்களில் கடைகளில் வாங்கிய உணவு சாப்பிடுவோம். ஆனால் ஒரு முறை இந்த ஸ்நாக்ஸ் வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்கள். 10 நிமிடத்தில் செய்யலாம். ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

சோம்பு - 1 ஸ்பூன்

மிளகாய்தூள் - 1 ஸ்பூன்

மைதா மாவு - 4 ஸ்பூன்

அரிசி மாவு - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

வெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் சோம்பு, மிளகாய்த்தூள், அரிசி மாவு, மைதா மாவு, உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும். மாவு உருண்டை பிடிக்கிற அளவு பக்குவமாக இருக்குமாறு பிசையவும். மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

இப்போது கடாய்யில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காய உருண்டையை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக வைத்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் வெங்காய போண்டா ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes Onion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment