Advertisment

கல்யாணம் ஃபிக்ஸ் பண்றாங்களா? உங்க உணவுகள் இப்படி இருக்கட்டும்!

வாழ்வில் ஓரு முறை மட்டுமே நடைபெறும் திருமணத்திற்கு நாம் பல விஷயங்கள் செய்தாலும். ஒரு சரியான டயட் பிளானை நாம் பின்பற்ற வேண்டும் என்ற விஷயத்தை மறந்துவிடுகிறோம். இதைப்பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கல்யாணம் ஃபிக்ஸ் பண்றாங்களா? உங்க உணவுகள் இப்படி இருக்கட்டும்!

food taken before your marriage get fixed, உங்களுக்கு விரைவில் திருமண நடக்க உள்ளதா? திருமணத்தின் முன் ஏற்பாடுகளில் நீங்கள் பிசியாக இருப்பீர்கள். திருமணத்திற்கான நகைகள், உடை, திருமண பத்திரிக்கை அச்சிட்டு உறவினர்களுக்கு கொடுப்பது என்று பல வேலைகள் இருக்கிறது . ஆனால் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி நீங்கள் யோசித்தது உண்டா. வாழ்வில் ஓரு முறை மட்டுமே நடைபெறும் திருமணத்திற்கு நாம் பல விஷயங்கள் செய்தாலும். ஒரு சரியான டயட் பிளானை நாம் பின்பற்ற வேண்டும் என்ற விஷயத்தை மறந்துவிடுகிறோம்.  இதைப்பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

Advertisment

நீங்கள் எந்த உணவுகளை சாப்பிடலாம்?

உணவை விட நீர் முக்கியம் என்பதால். தினமும் இரண்டு அல்லது மூன்று லிட்டர் வரை நீர் குடிக்க வேண்டும். அதிக நீரில் எலுமிச்சை சாறை கலந்து அதில் சக்கரையை சேர்த்துகொள்ளாமல் பருகலாம். அதிக நீர் சத்து உள்ள பழங்கள், காய்கறி ஜீஸ் ஆகியவற்றை பருகினால்  உங்கள் சருமம் வரண்டு போகாமல் இருக்கும்.

ஓட்ஸ், முழு தானியங்களான கோதுமை, ராகி, கோதுமை பிரட், கோதுமை பாஸ்தா ஆகியவற்றை சாப்பிட வேண்டும். மேலும் காராமணி, கருப்பு கொண்டகடலை ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.

அவக்கடோ, நட்ஸ், பாதாம் பருப்பு, வால்நட், சூரியகாந்தி விதைகள், சியா விதைகள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.

பச்சை காய்கறிகளை சாப்பிடுவதை அதிகப்படுத்த வேண்டும். கேரட், வெள்ளரிக்காய், தக்காளி ஆகியவற்றை பயன்படுத்தி சாலட்  செய்து சாப்பிடுவதால். இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்  இருப்பதால் உடலுக்கு நன்மைகளை உண்டாக்கும்.

publive-image

மேலும் உங்கள் உணவில் கீரைவகைகளை அதிகம் சேர்த்துகொள்ள வேண்டும். காலை எழுந்தவுடன் சிறிது நேரம் கழித்து பழங்களை எடுத்துகொண்டால் அதிக நன்மைகள் கிடைக்கும்.

நீங்கள் நொறுக்கு தீனி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் உப்பு சேர்க்காத முந்திரி பருப்பும், பாதாம் பருப்பு ஆகியவற்றை சாப்பிடலாம். மேலும் இளநீரை தவறாமல் பருக வேண்டும்.

உங்களால் உடல் பயிற்சி கூடத்திற்கு செல்ல முடியவில்லை என்றாலும். நடப்பது அல்லது ஓடுவதை ஒரு பழக்கமாக கொள்ள வேண்டும்.

இந்த உணவுகளை திவிர்க்கவும்

மைதா மாவு, வெள்ளை சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், கேக்ஸ்,பிஸ்கட், இனிப்பு நிறைந்த ஜீஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மதுப்பழக்கம் இருந்தால் அதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment