இனி பிரபலமான பால்கோவாவை வீட்டிலேயே செய்யலாம். மிகவும் எளிமையான முறையில் செய்ய முடியும்.
தேவையான பொருட்கள்
பால் – 1 லிட்டர்
சர்ககரை
எலுமிச்சை பழம்
நெய்
செய்முறை
எருமைப்பால் அல்லது பசும் பால் ஆகியவற்றை நாம் எடுத்துகொள்ளலாம். இந்நிலையில் பாலை நன்றாக காய்ச்ச வேண்டும். பிறகு சிறிய தீயில் வைத்து கிளரிகொண்டே இருக்க வேண்டும். 10 நிமிடங்களுக்கு பிறகு எலுமிச்சை சாறை பிழிந்து விடவும். தொடர்ந்து பால் திரிந்துவிடும். தொடர்ந்து கிளர வேண்டும். தற்போது நெய் ஊற்ற வேண்டும். தொடர்ந்து சர்க்கரை சேர்த்து கிளர வேண்டும். அடுப்பை அணைத்துவிட்டு சூடு ஆறியதும் சாப்பிட்டால் சுவையான பால்கோவா ரெடி.