காலையில் ஒரு லிட்டர் கோலா ( cola) காலை உணவை சாப்பிடிவதில்லை. பேக் செய்யப்பட்ட ஜூஸ் குடிப்பது, இதுபோல நிறைய ஜூஸ் மற்றும் இனிப்பு சிரப் சாப்பிடுவது. மாலை 5 மணிக்கு, பெரிய பீட்சா, பர்கர் மற்றும் துரித உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை சோஹித் சதுர்வேதி 2017 வரை கடைபிடித்து வந்துள்ளார்.
இதனால் கடுமையான கல்லீரல் பாதிப்பு, அதிக சர்க்கரை , இதய ரத்த குழாய்கள் கொழுப்பு படிதல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டார். கிட்டதட்ட அவர் அதிக நாட்கள் வாழ வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அந்த நிமிடத்தில்தான், இனி நமது வாழ்க்கை இப்படி நகரக்கூடாது என்று முடிவெடுதுள்ளார். கூடுதாலக அவருக்கு காலில் உணர்வற்ற தன்மையும் அதிகரித்துள்ளது. அவரது குடும்பத்தில் அனைவருக்கும் சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் இருந்திருக்கிறது. மேலும் எச்.பி.ஏ.1.சி அளவு 10.1% இருந்திருக்கிறது. இந்நிலையில் சமந்தபட்ட மருத்துவரிடம் செல்கிறார். மற்றும் அவருக்கு டயட்டீஷியன் உதவியையும் பெறுகிறார்.
இந்நிலையில் 3 வேளை உணவுக்கு நாம் பழக்கப்பட வேண்டும். எல்லா 2 மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு சிறிய அளவில் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த டயட்டில் முதலில் நார்சத்து, புரத சத்து, கார்போஹைட்ரேட்ஸை இறுதியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்நிலையில் அவருக்கு, புரோட்டீன் சத்து அதிகமாக உள்ள யோகட் அல்லது தயிர், காய்கறிகள் மற்றும் ரொட்டி. இந்த ரொட்டிகள் கோதுமை மற்றும் கடலை மாவில் செய்ததாக இருக்க வேண்டும்.
நார்சத்து, நாம் சாப்பிடும் கார்போஹைட்ரேட் ரத்ததில் உடனடியாக கலந்து சர்க்கரை அளவை அதிகப்படுத்தாது. அசைவம் சாப்பிடுபவர்கள் மீன் மற்றும் சிக்கன் அவித்து குழம்பு வைத்து சாப்பிடலாம்.
இந்நிலையில் இவர் காலை உணவாக ஓட்ஸ் மற்றும் குயினோவா ( சிறு தானிய வகைகளைப் போல் ஒன்று) பான்கேக் சாப்பிடுள்ளார். இவர் உப்புமா ஒட்டுமொத்தமாக சாப்பிடுவதில்லை. இவை சுத்திகரிப்பட்ட சேமியா, அல்லது ரவையில் செய்வதால் உடலுக்கு நன்மை ஏற்படாது. பிரட் மற்றும் உருளைக்கிழங்கை கைவிட்டார்.
நொறுக்குத் தீனிகளுக்கு பதிலாக அவர் சாலட்டை சாப்பிட்டார். மேலும் காலையில் வெந்தயம் ஊறவைத்த நீரை பருகி உள்ளார். தொடர்ந்து தோல் நீக்கிய பாதம், சில வாநட் சாப்பிட்டு காலை பொழுதை தொடங்கி உள்ளார்
இன்சுலின் ஊசியை செலுத்தும் அளவிற்கு செல்லகூடாது என்பதில் உறுதியாக இருந்தார். தினமும் 3000 படிகளாவது நடந்துவிடுவார். சாப்பிடும் உணவின் கலோரிகளை எப்போதும் கணக்கிட்டு சாப்பிடுவார்.
இந்நிலையில் சீட் டே ( cheat day) என்ற ஒன்று வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களைத் தானே ஏமாற்றி கொள்கிறார்கள். சில மாற்றங்களை செய்தாலே சர்க்கரை நோய் நமது வேலையையும் வாழ்வையும் அழிக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.