சாதத்துடன் சேர்த்து சாப்பிட அப்பளம் ஒன்று இருந்தாலே போதும் முழு சாப்பாடும் நிறைவு பெறும். அப்பளத்தை எண்ணெயில் பொறித்து எடுத்து மொறு மொறுப்பாக தனியாக சாப்பிட்டாலும் சுவையாக தான் இருக்கும். அரிசி அப்பளத்தை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 1 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
எள் - 2 டீஸ்பூன்
உப்பு
செய்முறை
அரிசி மாவு, சீரகம், பெருங்காயம், எள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அனைத்து பொருட்களையும் நன்றாக கட்டி விழாதவாறு பிசைய வேண்டும். பின்னர் மாவை அப்பளம் வடிவில் கட் செய்து கொள்ளவும்.
பின்னர் இட்லி தட்டில் சிறிது எண்ணெய் சேர்த்து அதில் அப்பளம் மாவை வைத்து 10 -15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். அதன் பின்பு வேக வைத்த அப்பளத்தை எடுத்து சூரிய ஒளியில் 2 -3 நாள்கள் உலர வைக்க வேண்டும்.
நன்கு உலர்ந்த பிறகு அதனை எண்ணெயில் பொறித்து சாப்பிட்டால் கடையில் வாங்கும் அப்பளம் போன்று மொறு மொறு என்று மிகவும் சுவையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“