முறுக்கு செய்ய கடினமாக இருக்கிறதா? அதற்கு மாவு செய்ய தெரியாமல் இருக்கிறீர்களா? இனி கவலை வேண்டாம். ஈஸியாக வெறும் 3 பொருட்களை வைத்து முறுக்கு செய்து விடலாம். இதற்கு மாவு தயாரிப்பதும் சுலபம். அப்படி ஈஸியாக முறுக்கு செய்வது எப்படி என்று செஃப் வெங்கடேஷ் பட தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
கடலை மாவு
பொட்டுக்கடலை மாவு
அரிசி மாவு
ஓமம்
எண்ணெய்
மிளகாய்தூள்
உப்பு, பட்டர்
எள்
மஞ்சள் தூள்
செய்முறை
ஒரு பவுலில் சுடுதண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின்னர் வேறொரு பவுலில் மூன்று மாவையும் சேர்த்து அதனுடன் ஓமம், மிளகாய்தூள், உப்பு, எள், மஞ்சள் தூள் போட்டு அனைத்திஅயும் பிசைய வேண்டும். நன்கு கலந்ததும் அதில் பட்டர் மற்றும் தேவையான அளவு சுடுதண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.
Venkatesh Bhat makes Arisi Murukku | rice murukku | evening tea time snacks | vacation time munchies
பின்னர் கைகளை வைத்து மாவை நன்கு இலகுவாக பிசைய வேண்டும். சப்பாத்தி மாவு பதத்திற்கு வர வேண்டும். மேலே சிறிது எண்ணெய் ஊற்றி அதை ஒரு 10 நிமிடம் ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து எடுக்கலாம். இரண்டு பக்கமும் வேக விட்டு எடுத்தால் சுவையான முறுக்கு ரெடியாகி விடும்.
இந்த முறையில் செய்தால் வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு குழந்தைகளுக்கு 10 நிமிடத்தில் முறுக்கு செய்து கொடுக்கலாம்.