பழங்களை சாப்பிட சரியான நேரம் எது தெரியுமா ?

இரவு நேரத்தில் பழங்கள் சாப்பிடக்கூடாது என்ற கூற்று வழக்கமாக சொல்லப்படுகிறது. இரவு வேலைகளை முடித்துவிட்டு சிலர் நள்ளிரவில் உணவு சாப்பிடுவார்கள். அப்போது பழங்களை சாப்பிடலாமா என்ற கேள்வி நமக்கு வரலாம். இரவில் பழங்கள் சாப்பிடால் உடல் எடை அதிகமாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் சரியாக செரிமானம் ஆகாது என்றும் கூறப்படுகிறது.

இரவு நேரத்தில் பழங்கள் சாப்பிடக்கூடாது என்ற கூற்று வழக்கமாக சொல்லப்படுகிறது. இரவு வேலைகளை முடித்துவிட்டு சிலர் நள்ளிரவில் உணவு சாப்பிடுவார்கள். அப்போது பழங்களை சாப்பிடலாமா என்ற கேள்வி நமக்கு வரலாம். இரவில் பழங்கள் சாப்பிடால் உடல் எடை அதிகமாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் சரியாக செரிமானம் ஆகாது என்றும் கூறப்படுகிறது. நள்ளிரவில்  பழங்கள் சாப்பிடுவது குறித்து பலர் பல விதமான கருத்துக்களை கூறுகின்றனர்.  சிலர் காலை 4 மணிக்கு பிறகு பழங்களை சாப்பிடலாம் என்றும் கூறுகின்றனர். பழங்கள் சாப்பிட எது சிறந்த நேரம் என்பதை தெரிந்துகொள்வதற்கு முன்பாக பழங்களில் என்ன இருக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

நார்சத்து, பொட்டாஷியம், வைட்டமின் சி, ஃபோலேட் என்ற சத்துக்கள் உள்ளன. இரவு நேரத்தில் பழங்கள் சாப்பிடுவதால் நாம் சாப்பிடும் கலோரிகள் ரெட்டிப்பாகும் என்றும் கூறப்படுவது தவறு என்றும் அதற்கு விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் இல்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் நள்ளிரவில் எந்த உணவையும் எடுத்துகொண்டால் அது ஆபத்துதான் என்றும் தூங்க செல்வதற்கு 3 மணி நேரம் முன்பாக நாம் உணவை சாப்பிட்டு முடித்துருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Right time to eat fruits