கடும் உடல் சோர்வு ஏற்பட்டால் பூசணி விதைகளை எடுத்துகொள்ளலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உணவு மனநலம் குறித்து ஹார்வர்டு பல்கலைகழத்தை சேர்ந்த மருத்துவர் உமா கூறுகையில், தொடர்ந்து சோர்வாக உணரும் நபர்கள் மற்றும் மயக்கம் உடல் சோர்வு ஏற்படும்போது இதிலிருந்து நிவாரணம் பெற பூசணி விதைகளை சாப்பிடலாம் என்று கூறியுள்ளார்.
பூசணி விதைகளில் மெக்னீஷியம், சிங், புரத சத்துகள் உள்ளது. இவை நமது சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள மெக்னீஷியம் வீக்கத்தை குறைத்து, நமது நரம்பு மண்டலத்தை ஓய்வாக உணரச் செய்கிறது. நாம் உடல் பயிற்சி செய்யும்போது, நமது லாக்டேட் நமது ரத்ததில் அதிகமாகும். இதனால் சோர்வு மற்றும் முட்டுகளில் வலி ஏற்படும்.
பூசணி விதைகளில் உள்ள மெக்னீஷியம் லாக்டேட் அதிகமாவதை தடுக்கும். இதனால் சோர்வு நீங்கும். இதில் இரும்பு சத்து மற்றும் மெக்னீஷியம் இருப்பதால், உடல் இயக்கும் சக்தியை உருவாக்குவதில் உதவுகிறது. ஹீமோகுளோபின் உருவாக்கத்தில் இரும்பு சத்து தேவைப்படுகிறது. மெக்னீஷியம் உணவை சக்தியாக மாற்ற உதவுகிறது. இதனால் தசைகள் மற்றும் நரம்புகள் செயல்பட உதவுகிறது.
இந்நிலையில் பூசணி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பு சத்து உள்ளது. இதில் பைட்டோஸ்டிரால்ஸ் , பினோலிக் காம்பவுண்ட்ஸ் , வைட்டமின் இ, குகுர்பிடசின்ஸ், ஒமேகா 3, 6 மற்றும் 9 பேட்டி ஆசிட், அமினோ ஆசிட் உள்ளது. மேலும் இதில் அதிக மெக்னீஷியம், பொட்டாஷியம், பாஸ்பரஸ் உள்ளது. மேலும் அதில் கால்சியம், காப்பர் உள்ளது.
பூசணி விதைகள் எடுத்துக்கொண்டால் இதய ஆரோக்கியம் நல்ல முறையில் முன்னேறும். நோய் எதிர்பு சக்தியை அதிகரிக்கும். செல்கள் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும். மனநிலையை உத்வேகப்படுத்த உதவும். தூக்கத்தை அதிகரிக்கும். கண், கூந்தல், சரும ஆரோக்கியத்திற்கு உதவும். புற்றுநோய் வராமல் தடுக்கும் பண்புகள் கொண்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“