சேனையை நாம் அதிகமாக சாப்பிடுவதில்லை ஆனால் இதில் இருக்கும் ஈஸ்டோஜன் பெண்களுக்கு மிகவும் நல்லது அதனால் இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும், இதில் ஈசியாக செய்யக் கூடிய வறுவல் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சேனை
உப்பு
மஞ்சள் பொடி
சாம்பார் பொடி
மிளகாய் பொடி
நறுக்கிய வெங்காயம்
கடுகு
பூண்டு
செய்முறை :
முதலில் சேனையை நன்றாக கழுவி ,நன்றாக நறுக்க வேண்டும். தொடர்ந்து அதில் மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, உப்பு போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி. அதில் கடுகு, பூண்டு சேர்த்து, இந்த சேனையை சேர்த்து வறுக்கவும். சுவையான சேனை வறுவல் ரெடி.