பிரட் வைத்து சூப்ரான பப்ஸ் செய்ய முடியும். இது மிகவும் சுவையான ஒரு மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக இருக்கும்.
தேவையான பொருட்கள்
வெண்ணை ஒரு டீஸ்பூன்
பெரிய வெங்காயம் நறுக்கியது
சோம்பு பவுடர் ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய்
இஞ்சி- பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
கேரட், பீன்ஸ், பட்டாணி
கரம் மசாலா கால் டீஸ் பூன்
மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
2 உருளைக்கிழங்கு வேக வைத்தது
மைதா மாவு 2 டேபிள் ஸ்பூன்
பிரட்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெண்ணை சேர்க்கவும். தொடர்ந்து அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு தூள், இஞ்சி, பூண்டு விழுது ஆகியவற்றை சேர்க்கவும். தொடர்ந்து தனியாக அவித்து வைத்திருந்த கேரட், பீன்ஸ், பட்டாணி ஆகியவற்றை சேர்க்கவும். தொடர்ந்து அதில் கரம் மசாலா, மிளகாய் தூள், உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். எல்லாம் சேர்த்து நல்ல மசாலாவாக வர வேண்டும்.
தண்ணீர் சேர்த்து மைதா மாவை பேஸ்ட்போல் மாற்ற வேண்டும். தொடர்ந்து பிரட்டின் ஓரங்களை வெட்ட வேண்டும். ஒரு பக்கம் மட்டும் செய்த மாசாலாவை வைத்து. அந்த பிரட்டின் ஓரங்களில் மைதா பேஸ்டை சேர்த்து ஒட்ட வேண்டும். தற்போது இதற்கு மேல் இனியொரு பிரட் துண்டை வைக்கவும். இரண்டு பக்கங்களும் வெண்ணை தடவி, தோசைக் கல்லில் டோஸ் செய்து எடுக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil