Advertisment

உலர்ந்த மாவு கொஞ்சமா வையுங்க… உப்பலான சாஃப்ட் சப்பாத்தி ரொம்ப ஈஸி!

நிறைய பேர் சப்பாத்தி செய்யத் தொடங்குகிறார்கள். ஆனால், அடையாக முடிந்துவிடுகிறது. அவர்களால் உப்பலான சாஃப்ட்டான சப்பாத்தியை செய்ய முடியாமல் போகிறது. அதனால், இங்கே ரொம்ப ஈஸியாக உப்பலான சாஃப்ட் சப்பாத்தி செய்வது எப்படி என்று குறிப்புகளைத் தருகிறோம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Soft And Round Chapatis making tips, how to make, Soft And Round Chapatis, Chapatis making tips, Soft And Round Chapatis, Soft Chapatis, சப்பாத்தி புஸ்ஸுன்னு வரும் ரகசியம் இதுதான், சப்பாத்தி டிப்ஸ், Soft And Round Chapatis tips, சப்பாத்தி புஸ்ஸுன்னு வரும் ரகசியம் இதுதான், சப்பாத்தி டிப்ஸ், Tips to make chapati softer and fluffier, chapati tips

அனைவரின் வீடுகளிலும் சப்பாத்தி அன்றாட உணவுகளில் ஒன்றாகி விட்டது. ஆனால், அந்த மென்மையாகவும் சுவையாகவும் இருந்தால் சாப்பிட நன்றாக இருக்கும். ஆனால், பலரும், சப்பாத்தித்தி செய்யத்தான் முயற்சிக்கிறார்கல். ஆனால், அது கோதுமை அடையாக முடிந்துவிடுகிறது. அதனால், அவர்கள் மென்மையான, உப்பலான சுவையான சப்பாத்தியை சாப்பிட்டுப் பார்க்காமலே போகிறார்கள். அதனால், இங்கே ரொம்ப ஈஸியாக உப்பலான சாஃப்ட் சப்பாத்தி செய்வது எப்படி என்று குறிப்பு தருகிறோம்.

Advertisment

இந்திய வீடுகளில், சப்பாத்தி தவிர்க்க முடியாத உணவாக உள்ளது. சப்பாத்தி மென்மையாகவும் வட்டமாகவும் இருந்தால் அவர்கள் சப்பாத்தி சுடுவதில் மாஸ்டர் என்றே சொல்லலாம். சிலர் சப்பாத்தியை உருட்டச் சொன்னால், இந்தியா மேப், உலக நாடுகள் மேப் எல்லாத்தையும் மூளியும் மொடுக்குமாக உருட்டுவார்கள். ஆனால், சப்பாத்தியை வட்டமாக உருட்டுவது என்பது ஒரு கலை.

‘புல்கா’ என அழைக்கப்படும் மென்மையான சப்பாத்தி செய்வது எளிதான காரியம் அல்ல. மென்மையான மற்றும் வட்டமான சப்பாத்தி செய்வதற்கு நல்ல பயிற்சி தேவை. மென்மையான, வட்டமான சப்பாத்தி செய்ய ஆசைப்படுகிறீர்களா கவலைப்பட வேண்டாம். வட்டமான பஞ்சுபோன்ற சப்பாத்தி செய்ய உங்களுக்கு உதவுவதற்காக 5 குறிப்புகளைத் தருகிறோம்.

1.சப்பாத்தி மாவை சாஃப் ஆக்குங்கள்

சப்பாத்திக்கு மாவைப் பிசையும் போது, தேவையான மாவு, சர்க்கரை, உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக கலக்க வேண்டும். உங்கள் மாவில் உள்ள சரியான நெகிழ்ச்சித்தன்மை மென்மையான மற்றும் வட்டமான புல்கா செய்வதை எளிதாக்குகிறது. மாவை பிசைந்த பிறகு, மாவின் மேல் எண்ணெயை ஊற்றினால், மாவு மென்மையாகும்.

2.பிசைந்த மாவை சிறிது மூடி வைக்க வேண்டும்

சப்பாத்தி மாவை பிசைந்த பிறகு ஒரு கிண்ணம் அல்லது மஸ்லின் துணியால் மூடி வைக்க வேண்டும். சப்பாத்தி மாவை 20-30 நிமிடங்கள் அப்படியே மூடி வைக்க வேண்டும். இப்படி மூடுவதால் சப்பாத்தி மாவு மென்மையை இழக்காமல் அதை மூடுவது அதன் மென்மையை இழக்காமல் தடுக்கும். சப்பாத்தி மாவை சிறிது நேரம் மூடி வைத்த பிறகு மாவு சரியான பதத்திற்கு வரும்

3.சீரான அளவு சப்பாத்தி மாவு உருண்டைகள் செய்தல்

சப்பாத்தி செய்ய ஆரம்பிக்கும் போது, மாவு உருண்டைகள் சரியான அளவிலும் சீரான அளவிலும் உள்ளதா என பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், சரியான அளவிலும் சீரான அளவிலும் பிடிக்கப்பட்ட மாவு உருண்டைகள் ஒரே அளவான சப்பாத்திகளை செய்ய ஏதுவாக இருக்கும்.

4.சப்பாத்தி உருட்டுவது எப்படி?

சப்பாத்தி செய்யும்போது, சாப்பாத்தி மாவு உருட்டுவதுதான் மிகவும் கடினமான வேலை. ஒருவர் சப்பாத்தி சுடுவதில் ஆரம்ப நிலையில் இருந்தால், எவ்வளவு கடினம் என்பது தெரியும். ஆனால், உப்பலான சப்பாத்திகளை செய்வதற்கு ஒரே வழி கொஞ்சம் உலர்ந்த மாவைப் பயன்படுத்துங்கள். அதுமட்டுமல்ல, சப்பாத்தி உருட்டும்போது திருப்பி திருப்பி போட்டு தேயுங்கள்.

5.சப்பாத்தி சுடுவது எப்படி?

சப்பாத்தியை உருட்டிய பிறகு, அவற்றை சீக்கிரமாக சப்பாத்தி சுடும் பாத்திரத்தில் வைத்து சுட வேண்டும். சப்பாத்தி சுடும்போது ஸ்டவ்வில் அனல் மிதமான அளவு வைத்துக்கொள்ளுங்கள். அனல் அதிகமாக வைக்காதீர்கள். ஏனென்றால், அனல் அதிகமாக வைத்தால் சப்பாத்தி தீய்ந்துவிடும். அதனால், சப்பாத்தி சாஃப்ட்டாகவும் உப்பலாகவும் செய்ய ஸ்டவ்வில் மிதமாக தீயை வைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான், சாஃப்ட்டான உப்பலான சப்பாத்தி ரொம்ப ஈஸியாக செய்யலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chapati Chappathi Recipe
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment