இந்த முறையில் நீங்கள் இட்லி செய்தால், ரேஷன் அரிசியிலும் சாஃப்டான இட்லி செய்ய முடியும். மறக்காம சமைத்து பாருங்க
தேவையான பொருட்கள்
3 கப் ரேஷன் இட்லி அரிசி
உப்பு
1 கப் ரேஷன் பச்சரிசி
ஒன்றரை கப் உளுந்து
¾ கப் அவல்
செய்முறை: ரேஷன் அரிசியை உப்பு சேர்த்து நன்றாக கழுவ வேண்டும். முதல் இரண்டு முறை கழுவும்போது பழுப்பு நிறத்தில் தண்ணீர் இருக்கும். இந்நிலையில் வெள்ளை நிறத்தில் தண்ணீர் மாறும் வரை ஒரு 5 முதல் 6 முறை கழுவ வேண்டும், அப்போதுதான் அரிசியின் நாற்றம் எடுக்காது. தொடர்ந்து பச்சரிசியையும் கழுவ வேண்டும். இரண்டையும் சேர்த்து 5 மணி நேரம் ஊற வைக்கவும். தொடர்ந்து உளுந்தை கழுவி 1 மணிநேரமும், அவலை 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். முதலில் உளுந்தை அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். உளுந்தை அரைக்கும்போது, ஊற வைத்த தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். இதை தனியாக எடுத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து முதலில் அவலை அரைக்க வேண்டும், தொடர்ந்து அரிசியை சேர்த்து அரையுங்கள். இத்துடன் 2 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்துகொள்ளுங்கள். இதைத்தொடர்ந்து மாவு பொங்கி வர வேண்டும் என்றால், கடைசியாக கிரேண்டர் கழுவிய நீரை மாவில் சேர்த்து கொள்ளுங்கள் தற்போது உளுந்து, அரிசி மாவு இரண்டையும் நன்றாக கலக்க வேண்டும். 8 மணி நேரம் புளித்த உடன், இட்லி பாத்திரத்தில் மாவை ஊற்றி வேக வைத்து எடுத்தால் சாஃப்டான இட்லி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“