எண்ணெய்யில் பொறித்த ஸ்நாக்ஸைவிட இதுபோல நாம் செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.
தேவையான பொருட்கள்
ஒரு கப் கேழ்வரகு மாவு
அரை கப் வேர்கடலை
ஒரு கப் தண்ணீர்
கால் ஸ்பூன் உப்பு
ஒரு ஸ்பூன் நெய்
அரை கப் துருவிய வெல்லம்
ஏலாக்காய் பொடி
செய்முறை : தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். தொடர்ந்து அதில் கேழ்வரகு மாவை சேர்க்கவும். இந்த மாவை சேர்ப்பதற்கு முன்பாக உப்பு மற்றும் நெய்யை சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த கலவையை நன்றாக மாவு போல் பிசைந்து வைத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து வேர்கடலையை தோல் நீக்கிவிட்டு, அதில் வெல்லம் , ஏலக்காய் பொடி சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். மாவை உருண்டைகளாக பிடித்து நீள வாக்கில் அதில் பொடி செய்ததை வைத்து, கொழுகட்டை போல் நிறப்பிக்கொள்ளவும். தொடர்ந்து இதை இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil